Published : 28 Jan 2025 06:50 PM
Last Updated : 28 Jan 2025 06:50 PM
துலாம் (சித்திரை 3, 4 பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதங்கள்) கிரகநிலை - சுக ஸ்தானத்தில் சூரியன், புதன் - பஞ்சம ஸ்தானத்தில் சனி - ரண ருண ரோக ஸ்தானத்தில் சுக்கிரன், ராகு - அஷ்டம ஸ்தானத்தில் குரு(வ) - பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய்(வ) - அயன சயன போக ஸ்தானத்தில் கேது என கிரகநிலை உள்ளது.
கிரகமாற்றங்கள்: 05.02.2025 அன்று சுக ஸ்தானத்தில் இருந்து புதன் பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 11.02.2025 அன்று அஷ்டம ஸ்தானத்தில் குரு வக்ரம் நிவர்த்தி ஆகிறார் | 12.02.2025 அன்று சுக ஸ்தானத்தில் இருந்து சூரியன் பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 21.02.2025 அன்று பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய் வக்ரம் நிவர்த்தி ஆகிறார் | 26.02.2025 அன்று தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து புதன் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்கள்: துலா ராசியினரே... நீங்கள் எங்கு சென்றாலும் உங்களுக்கு உதவ உள்ளங்கள் இருக்கும். இந்த மாதம் ராசிநாதன் சுக்கிரன் மறைந்திருந்தாலும் உச்சமாக இருப்பதன் மூலம் மனம் மகிழும் சம்பவங்கள் உண்டாகும். செவ்வாய் சஞ்சாரத்தால் மன நிம்மதியும், மனோதிடமும் உண்டாகும். தெளிவான சிந்தனையுடன் எதிலும் ஈடுபடுவீர்கள். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். உற்சாகமாக காணப்படுவீர்கள். திடீர் செலவு உண்டாகும். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை.
தொழில் வியாபாரத்தில் இருந்த தடைகள் நீங்கும். போட்டிகள் குறையும். பழைய பாக்கிகளை வசூலிப்பதில் வேகம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தெளிவாக சிந்தித்து எதனையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். சூரியன் சஞ்சாரத்தால் புதிய பதவிகள் கிடைக்கும்.
குடும்ப ஸ்தானத்தை குருவும் சனியும் பார்க்கிறார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியும், உற்சாகமும் காணப்படும். கணவன், மனைவிக்கிடையில் இருந்த பிரச்சினைகள் தீரும். பிள்ளைகள் பற்றிய கவலைகள் நீங்கும். உறவினர் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பெண்களுக்கு முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். காரியங்களை செய்து முடிப்பதில் திறமை வெளிப்படும் பணவரத்து கூடும்.
கலைத்துறையினருக்கு அனுசரித்து செல்வது நல்லது. மனக்கவலை உண்டாகும். வீண் அலைச்சலும் அதனால் சரியான நேரத்திற்கு உணவு உண்ண முடியாமலும் போகலாம். எதிலும் கவனமாக செயல்படுவது நல்லது. உடல் சோர்வு உண்டாகலாம். வீண் அலைச்சலை தவிர்த்து வேலையில் கவனம் செலுத்துவது நல்லது. அரசியல்துறையினருக்கு முன்னேற்றம் காணப்படும். அதே நேரத்தில் பல தடைகளை தாண்டி செயல்பட வேண்டி இருக்கும்.
எதிர்பார்த்த லாபம் வரும். செயல் திறமை வெளிப்படும். சுதந்திரமாக செயல்படும் வாய்ப்பு கிடைக்கும். வரவேண்டிய பணம் வந்து சேரும். மாணவர்களுக்கு கல்வியில் நினைத்ததை விட கூடுதல் பாடங்களை படிக்க வேண்டி இருக்கும். மனம் தளராது செயல்பட்டால் வெற்றி கிடைக்கும்.
சித்திரை 3, 4 பாதங்கள்: இந்த மாதம் எடுத்த காரியங்களில் சாதகமான போக்கு காணப்படும். மங்கள நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள நேரிடும். வெளியூர் பயணம் செல்ல வேண்டி இருக்கும். பிரிந்து சென்ற நண்பர்கள் மீண்டும் வந்து சேர்வார்கள்.
சுவாதி: இந்த மாதம் மன அமைதி கிடைக்கும். காரிய தடைகள் விலகும். விருப்பங்கள் கைகூடும். மரியாதையும், அந்தஸ்தும் அதிகரிக்கும். பயன்தரும் காரியங்களில் ஈடுபடுவீர்கள். எதிர்பாராமல் நடக்கும் சம்பவங்கள் மூலம் நன்மை உண்டாகும்.
விசாகம் 1, 2, 3ம் பாதங்கள்: இந்த மாதம் மனகுழப்பம் நீங்கி தெளிவு பெறுவீர்கள். எதிர்பாலினரால் காரிய அனுகூலம் ஏற்படும். எதிலும் எச்சரிக்கையாக செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். புதிய ஆர்டர்கள் வந்து சேரும். பழைய பாக்கிகள் வசூலிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள்.
பரிகாரம்: துர்க்கை அம்மனை வணங்க காரிய அனுகூலம் உண்டாகும். மனக்கவலை தீரும் | அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி | சந்திராஷ்டம தினங்கள்: 6, 7, 8 | அதிர்ஷ்ட தினங்கள்: 1, 27, 28 | இந்த மாதம் கிரகங்களின் நிலை:
- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT