Published : 28 Jan 2025 12:59 PM
Last Updated : 28 Jan 2025 12:59 PM
மிதுனம் (மிருகசிரீஷம் 3, 4 பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்) கிரகநிலை - ராசியில் செவ்வாய்(வ) - சுக ஸ்தானத்தில் கேது - அஷ்டம ஸ்தானத்தில் சூரியன், புதன் - பாக்கிய ஸ்தானத்தில் சனி - தொழில் ஸ்தானத்தில் சுக்கிரன், ராகு - அயன சயன போக ஸ்தானத்தில் குரு (வ) என கிரகநிலை உள்ளது.
கிரகமாற்றங்கள்: 05.02.2025 அன்று அஷ்டம ஸ்தானத்தில் இருந்து புதன் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 11.02.2025 அன்று அயன சயன போக ஸ்தானத்தில் குரு வக்ரம் நிவர்த்தி ஆகிறார் | 12.02.2025 அன்று அஷ்டம ஸ்தானத்தில் இருந்து சூரியன் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 21.02.2025 அன்று ராசியில் செவ்வாய் வக்ரம் நிவர்த்தி ஆகிறார் | 26.02.2025 அன்று களத்திர ஸ்தானத்தில் இருந்து புதன் அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்கள்: மிதுன ராசியினரே... நீங்கள் விடா முயற்சியுடைவர். இந்த மாதம் ராசிநாதன் புதன் பாக்கிய ஸ்தானத்திலிருக்கிறார். எதிலும் மிகவும் கவனமாக ஈடுபடுவது நல்லது. சுக்கிரன் சஞ்சாரம் பேச்சின் இனிமை சாதுர்யம் இவற்றால் எடுத்த காரியங்கள் சாதகமாக முடிய உதவும். சொத்து மனை வீடு சம்பந்தமான காரியங்களில் தாமதம் உண்டாகலாம். அடுத்தவர் பிரச்சினைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது.
தொழில் வியாபாரம் மந்தமான நிலையில் காணப்பட்டாலும் வருமானம் வழக்கம் போல் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எந்த ஒரு வேலையிலும் முழு கவனத்துடன் ஈடுபடுவது நல்லது. எடுத்த வேலைகளை சரியான நேரத்தில் செய்ய திட்டமிடுவது நல்லது. பணி நிமித்தமாக பிரயாணம் ஏற்படலாம்.
குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. கணவன், மனைவிக்கிடையே இருந்த இடைவெளி குறையும். பிள்ளைகளின் எதிர்காலம் பற்றி சிந்தனை அதிகரிக்கும். உறவினர்கள் வழியில் மனக்கசப்பு ஏற்படலாம். பெண்களுக்கு எந்த காரியத்திலும் ஈடுபடும் முன்பு திட்டமிட்டு செயல்படுவது நல்லது. பணவரத்து தாமதப்படும்.
கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்க பட்ட சிரமங்கள் குறையும். வேலை பளு குறையும். உழைப்பு வீணாகும். வீட்டை விட்டு வெளியில் தங்க நேரலாம். திடீர் செலவு உண்டாகும். அரசியல்துறையினருக்கு இறுக்கமான சூழ்நிலை நீங்கி மகிழ்ச்சி உண்டாகும். சந்தோஷமாக வெளியே சென்று வருவீர்கள். எல்லா காரியங்களும் அனுகூலமாக நடக்கும்.
மனகவலை நீங்கி நிம்மதி உண்டாகும். பொருள் வரத்து அதிகரிக்கும். வாகனம், பூமி மூலம் லாபம் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் இருக்கும் மந்த நிலை மாற கூடுதல் கவனத்துடன் படிப்பது அவசியம். எந்த வேலையிலும் முழு கவனம் தேவை.
மிருகசிரீஷம் 3, 4 பாதங்கள்: இந்த மாதம் எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிக்க முழு முயற்சி மேற்கொள்வீர்கள். வாக்குவாதங்களை தவிர்ப்பது நன்மை தரும். பயணங்களால் நன்மை உண்டாகும். மனகுழப்பம் நீங்கி தெளிவு உண்டாகும். சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரிய அனுகூலம் ஏற்படும்.
திருவாதிரை: இந்த மாதம் குடும்பத்தினருடன் விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்பு வரும். எதிலும் எச்சரிக்கையும் கவனமும் தேவை. தொழில் வியாபாரம் சிறப்படையும். புதிய ஆர்டர்கள் பெறுவதில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் வேகம் இருக்கும்.
புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்: இந்த மாதம் உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக செயல்பட்டு பணிகளை வெற்றிகரமாக செய்து முடித்து மேலதிகாரிகளின் நன்மதிப்பை பெறுவார்கள். குடும்பத்தில் இருந்த டென்ஷன் விலகும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் உண்டாகும். சகோதரர் மூலம் நன்மை ஏற்படும்.
பரிகாரம்: ராமரை வணங்க குடும்பத்தில் குழப்பம் நீங்கி நண்மை உண்டாகும். ஆரோக்கியம் உண்டாகும் | அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி | சந்திராஷ்டம தினங்கள்: 25, 26 | அதிர்ஷ்ட தினங்கள்: 18, 19 | இந்தமாதம் கிரகங்களின் நிலை:
- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT