Published : 29 Sep 2024 03:26 PM
Last Updated : 29 Sep 2024 03:26 PM
ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதங்கள், ரோகிணி, மிருகசிரீஷம் 1, 2, பாதங்கள்) கிரகநிலை - ராசியில் குரு - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய் - சுக ஸ்தானத்தில் புதன் - பஞ்சம ஸ்தானத்தில் சூரியன், சுக்கிரன், கேது - தொழில் ஸ்தானத்தில் சந்திரன், சனி (வ) - லாப ஸ்தானத்தில் ராகு என கிரகநிலை உள்ளது.
கிரகமாற்றங்கள்: 06-10-2024 அன்று புதன் பஞ்சம ஸ்தானத்தில் இருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார். 14-10-2024 அன்று சுக்கிரன் சுக ஸ்தானத்தில் இருந்து பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார். 17-10-2024 அன்று சூரியன் பஞ்சம ஸ்தானத்தில் இருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 23-10-2024 அன்று செவ்வாய் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 25-10-2024 அன்று புதன் பஞ்சம ஸ்தானத்தில் இருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்கள்: இந்த மாதம் ராசியாதிபதி சுக்கிரன் சஞ்சாரத்தால் எந்த காரியத்தையும் செய்து முடிப்பதில் வேகம் ஏற்படும். முயற்சிகள் கைகூடும். பகைவர்களால் ஏற்படும் தொல்லைகளை சமாளிப்பீர்கள். புதிய நண்பர்களுடன் பழகும்போது கவனம் தேவை. தொழில் வியாபாரம் நிதானமாக நடக்கும். கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும்.
புதிய ஆர்டர்களுக்கான முயற்சிகள் சாதகமான பலன் தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும். அலுவலக பணிகள் மூலம் டென்ஷன் உண்டாகும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் கோபமாக பேசுவதை தவிர்ப்பது நல்லது.
கணவன், மனைவிக்கிடையில் வாக்குவாதங்கள் ஏற்படலாம். பெண்களுக்கு அடுத்தவர்களின் பிரச்சினைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. கலைத்துறையினருக்கு அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்படும்.
அரசியல்துறையினருக்கு தைரியம் தன்னம்பிக்கை ஏற்படும். மேலிடத்துடன் இருக்கும் உரசல்கள் அகலும். மாணவர்களுக்கு கல்வியை பற்றி டென்ஷன் ஏற்பட்டு நீங்கும். பாடங்களை ஒருமுறைக்கு இருமுறை படித்து புரிந்து கொள்வது நல்லது.
கார்த்திகை 2, 3, 4 பாதங்கள்: இந்த மாதம் மற்றவர்களால் அமைதியின்மை உண்டாகலாம். அடுத்தவர் பேச்சை கேட்பதை குறைப்பது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களுடன் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. சிலருக்கு இடமாற்றம் உண்டாகலாம். கணவன் - மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து பேசுவது நல்லது. தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் திட்டமிட்டபடி செயலாற்றி வெற்றியை எட்டி பிடிப்பார்கள். வியாபார போட்டிகள் குறையும்.
ரோகினி: இந்த மாதம் எதிர்பாராத செலவுகள் உண்டாகலாம். திட்டமிட்டு செயல்படுவது நல்லது. உறவினர்களுடன் தேவையற்ற வாக்குவாதம் உண்டாகலாம். வாகனங்களால் செலவும் ஏற்படும். நண்பர்களிடம் இருந்து பிரிவு உடல்சோர்வு உண்டாகலாம். மூத்த சகோதரர் உடல்நலத்தில் கவனம் தேவை. மாணவர்களுக்கு கூடுதலாக பொறுப்புகள் சேரும். கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். கவனமாக படிப்பது நல்லது. பொருளாதார சிக்கல் ஏற்பட்டு நீங்கும்.
மிருகசிரீஷம் 1, 2, பாதங்கள்: இந்த மாதம் தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் நீங்கி விருத்தியடையும். பொருட்களை வெளியூருக்கு அனுப்பும்போது கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலை பார்க்கும் இடத்தில் கவனமுடன் பழகுவது நல்லது. பேச்சு திறமையால் காரியங்களை எளிதாக செய்து முடித்து வெற்றி காண்பீர்கள். சரியான நேரத்தில் உறங்க முடியாத சூழ்நிலை உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனகசப்பு மாறும்.
பரிகாரம்: அஷ்டலட்சுமிகளையும் வணங்கிவர மனோதைரியம் கூடும். பணகஷ்டம் குறையும். குடும்பத்தில் சுபிட்சம் ஏற்படும் | அதிர்ஷ்ட கிழமைகள்: புதன் - வெள்ளி | சந்திராஷ்டம தினங்கள்: 9, 10 | அதிர்ஷ்ட தினங்கள்: 2, 3, 29, 30, 31 | இந்தமாதம் கிரகங்களின் நிலை:
- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT