Published : 31 May 2020 07:53 AM
Last Updated : 31 May 2020 07:53 AM

இந்தநாள் உங்களுக்கு எப்படி? 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: வாழ்க்கையில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். மற்றவர்களுக்காக செலவுகள் செய்து பெருமைப்படுவீர்கள். வெளியூரிலிருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி வரும்.

ரிஷபம்: உறவினர், நண்பர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். குலதெய்வ பிரார்த்தனைகளை குடும்பத்தினருடன் சென்று நிறைவேற்றுவீர்கள். பழைய சிக்கலில் ஒன்று தீரும்.

மிதுனம்: புதிய கோணத்தில் சிந்திப்பீர்கள். வீடு, வாகனப் பராமரிப்பு செலவுகள் திட்டமிட்டதைவிட அதிகரிக்கும். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள்.

கடகம்: தாய்வழி உறவினர்கள் மத்தியில் மதிப்பு உயரும். சுபநிகழ்ச்சிகளாலும், விருந்தினர்களின் வருகையாலும் வீடு களைகட்டும். சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும்.

சிம்மம்: அழகு, இளமை கூடி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். நவீன மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். மனைவிவழி உறவினர்கள் தக்க சமயத்தில் உதவுவார்கள்.

கன்னி: பழைய பிரச்சினைகள் மீண்டும் தலைதூக்கும். கொஞ்சம் பொறுமையை இழப்பீர்கள். உறவினர், நண்பர்களின் செயல்பாடுகள் டென்ஷனை ஏற்படுத்தும். வாகனம் செலவு வைக்கும்.

துலாம்: வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். தலைவலி, உடல் அசதி வந்து செல்லும். பண விஷயத்தில் கறாராக இருங்கள். அநாவசிய செலவுகளைத் தவிர்ப்பது நல்லது.

விருச்சிகம்: குடும்பத்தாரின் ஆதரவு அதிகரிக்கும். புது நண்பர்களின் ஆதரவால் உற்சாகம் பெறுவீர்கள். நீண்டநாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். ஆடை, ஆபணரங்கள் சேரும்.

தனுசு: உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். திடீர் சந்திப்பு நிகழும். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள்.

மகரம்: பிரச்சினைகளின் ஆனிவேரைக் கண்டறிவீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். புண்ணியத் தலங்கள் சென்றுவர திட்டமிடுவீர்கள். பணவரவு திருப்தி தரும்.

கும்பம்: உணர்ச்சிவசப்படாமல் அறிவுப்பூர்வமாக முடிவெடுங்கள். வெளிவட்டாரத் தொடர்பு அதிகரிக்கும். எதிர்பார்த்த பணம் தாமதமாகும். அடுத்தவர் விவகாரத்தில் தலையிடாதீர்கள்.

மீனம்: சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் வெற்றி பெறுவீர்கள்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x