Published : 24 May 2020 08:38 AM
Last Updated : 24 May 2020 08:38 AM
மேஷம்: பிள்ளைகளின் நலனில் அதிக அக்கறைக் காட்டுவீர்கள். குடும்பத்தில் குதூகலமான சூழல் உருவாகும். எடுத்த காரியங்களை சிறப்பாக முடித்துக் காட்டுவீர்கள்.
ரிஷபம்: கனவுத் தொல்லை வரும். பழைய கசப்பான சம்பவங்களை நினைத்து அவ்வப்போது சஞ்சலப்படுவீர்கள். நகைகள் உள்ளிட்ட முக்கிய பொருட்களை கவனமுடன் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
மிதுனம்: எதிர்மறை எண்ணங்கள் வரும். சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை அறிந்து கொள்வீர்கள். குடும்பத்தில் சின்னச் சின்ன சச்சரவுகள் வரக்கூடும். வாகனம் செலவு வைக்கும்.
கடகம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்க திட்டமிடுவீர்கள். செல்லும் இடமெல்லாம் சிறப்புக் கூடும். இனிய நினைவுகளில் அடிக்கடி மூழ்குவீர்கள்.
சிம்மம்: புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். எதிர்மறை எண்ணம் விலகும். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். சிக்கலான பிரச்சினைகளையும் தீர்க்கும் சக்தி உண்டாகும்.
கன்னி: ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். மூத்த சகோதரர் வகையில் உதவிகள் கிடைக்கும். வருமானம் உயர வழி பிறக்கும். எதிர்பாராத தொகை ஒன்று கைக்கு வந்துசேரும்.
துலாம்: பிள்ளைகளுடன் எதிர்பாராத வாக்குவாதம் வரும். அவர்களின் நடவடிக்கைகளை கண்காணியுங்கள். குடும்பத்தில் உள்ளவர்களிடம் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது.
விருச்சிகம்: கல்யாணப் பேச்சுவார்த்தை வெற்றியடையும். உறவினர், நண்பர்கள் உங்களின் சகிப்புத் தன்மையைப் பாராட்டுவார்கள். பால்ய நண்பர்களின் தொடர்பால் உற்சாகமடைவீர்கள்.
தனுசு: அக்கம்பக்கத்து வீட்டாருடன் இருந்துவந்த மோதல் போக்கு நீங்கும். சகோதரர்களுக்கிடையே மனம்விட்டுப் பேசி நல்ல முடிவுகள் எடுப்பீர்கள். பணவரவு திருப்தி தரும்.
மகரம்: புதிய திட்டங்கள் நிறைவேறும். தைரியமாக, தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகள் எடுத்து வெற்றி காண்பீர்கள். புண்ணிய தலங்களுக்குச் செல்ல திட்டமிடுவீர்கள்.
கும்பம்: மனக்குழப்பங்கள், வீண் விவாதங்கள் நீங்கும். எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். வீட்டை விரிவுபடுத்தி கட்டும் பணிகளில் மும்முரமாக ஈடுபடுவீர்கள்.
மீனம்: ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். கல்யாண முயற்சிகள் நல்ல விதத்தில் முடியும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை தந்து முடிப்பீர்கள். திடீர் பணவரவு உண்டு.
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT