Published : 15 May 2020 08:22 AM
Last Updated : 15 May 2020 08:22 AM

இந்தநாள் உங்களுக்கு எப்படி? 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். புது பொறுப்புகளை ஏற்றுக் கொள்வீர்கள். வீடு, மனை வாங்குவது, விற்பது குறித்து யோசிப்பீர்கள்.

ரிஷபம்: கடந்த கால இனிய அனுபவங்கள் மனதில் அடிக்கடி நிழலாடும். உறவினர்கள், நண்பர்கள் ஆதரவாகப் பேசத் தொடங்குவார்கள். சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரியவரும்.

மிதுனம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். பாதியில் நின்ற வேலைகள் முடியும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். கலைப்பொருட்கள் சேரும்.

கடகம்: சிலரின் விமர்சனங்களுக்கும், கேலி பேச்சுக்கும் ஆளாவீர்கள். குடும்பத்தினரிடம் கோபத்தைக் காட்ட வேண்டாம். பண விஷயத்தில் சாதுர்யமாகப் பேசி சமாளிப்பீர்கள்.

சிம்மம்: பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர்களால் ஆதாயமும் உண்டாகும். விலை உயர்ந்த மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். கணவன் - மனைவி இடையே இருந்துவந்த பனிப்போர் நீங்கும்.

கன்னி: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பும் உதவியும் கிடைக்கும்.

துலாம்: மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர்கள், நண்பர்களில் உண்மையானவர்களைக் கண்டறிவீர்கள். வாகனம் செலவு வைக்கும்.

விருச்சிகம்: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் உண்டாகும். வீடு, வாகனப் பராமரிப்பு செலவு ஏற்படும். கடனைத் தீர்க்க முயற்சிப்பீர்கள்.

தனுசு: துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். மனைவிவழியில் அந்தஸ்து உயரும். வெளியூரில் இருந்து இனிய செய்தி வரும்.

மகரம்: கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள்.

கும்பம்: வெளுத்ததெல்லாம் பாலாக நினைத்து சிலரிடம் பேசி சிக்கிக் கொள்ளாதீர்கள். உறவினர், நண்பர்களால் செலவினங்கள் அதிகரிக்கும். பால்ய நண்பர் தக்க சமயத்தில் உதவுவார்.

மீனம்: கணவன் - மனைவிக்குள் கருத்துவேறுபாடுகள் வந்து நீங்கும். யாரையும் மனம் நோகும்படி எடுத்தெறிந்து பேசாதீர்கள். வாகனத்தில் செல்லும்போது அலைபேசியில் பேச வேண்டாம்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x