Published : 06 May 2020 08:06 AM
Last Updated : 06 May 2020 08:06 AM

இந்தநாள் உங்களுக்கு எப்படி? 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: எதிர்ப்புகள், இழப்புகள், ஏமாற்றங்கள் நீங்கும். பிரியமானவர்களின் சந்திப்பு எதிர்பாராமல் நிகழும். பிள்ளைகளால் உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும்.

ரிஷபம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். பிள்ளைகளின் எதிர்காலத்தை மனதில் கொண்டு முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வெளியூரில் இருந்து எதிர்பார்த்த செய்தி வரும்.

மிதுனம்: விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். வழக்கில் சாதகமான நிலை காணப்படும்.

கடகம்: எதிர்பாராத செலவுகள் வந்தாலும் எதிர்பார்த்த இடத்திலிருந்து பணம் வந்து சமாளிப்பீர்கள். வீடு, வாகன பராமரிப்பு செலவுகள் ஏற்படும். அக்கம்பக்கத்தினர் ஆதரவு .உண்டு.

சிம்மம்: மனதில் குதூகலம் காணப்படும். கணவன் - மனைவிக்குள் இருந்துவந்த கருத்துவேறுபாடுகள் நீங்கி அன்யோன்யம் அதிகரிக்கும். பங்கு வர்த்தகத்தில் எதிர்பாராத லாபம் கிடைக்கும்.

கன்னி: சகோதரர் வகையில் நன்மை உண்டு. குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். வீடு, மனை வாங்குவது குறித்து குடும்பத்தினருடன் ஆலோசிப்பீர்கள். தாயாரின் ஆதரவு கிடைக்கும்.

துலாம்: சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும், அத்தியாவசிய செலவு அடுத்தடுத்து ஏற்படும். அநாவசிய பேச்சை தவிர்த்து விடுங்கள். யாருக்கும் உத்தரவாதம் தரவேண்டாம்.

விருச்சிகம்: எந்தக் காரியத்தையும் திட்டமிட்டு செய்யத் தொடங்குங்கள். உறவினர்கள், நண்பர்கள் உதவி கேட்டு நச்சரிப்பார்கள். பழைய கடனில் ஒரு பகுதியை தீர்க்க வழிபிறக்கும்.

தனுசு: குழப்பத்தில் இருந்துவந்த நீங்கள் திட்டவட்டமான முடிவுகளை எடுப்பீர்கள். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து ஆலோசனை செய்வீர்கள். மனைவிவழி உறவினரால் நன்மை உண்டு.

மகரம்: குடும்பத்தினருடன் மனம்விட்டுப் பேசி அவர்களின் எண்ணங்களை பூர்த்தி செய்வீர்கள். அரசுக் காரியங்களில் அனுகூலமான நிலை காணப்படும். விஐபியின் அறிமுகம் கிடைக்கும்.

கும்பம்: சோர்வு நீங்கி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். உடல்நிலை சீராகும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். வீட்டை விரிவுபடுத்தி கட்டுவது குறித்து திட்டமிடுவீர்கள்.

மீனம்: மறைமுக நெருக்கடிகளை சாமர்த்தியமாக ச்மாளிப்பீர்கள். மற்றவர்களைப் பற்றி வீண் விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. சிறுசிறு அவமானம், ஏமாற்றங்கள் ஏற்படக்கூடும்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x