Published : 01 May 2020 08:19 AM
Last Updated : 01 May 2020 08:19 AM
மேஷம்: வெளிவட்டாரத்தில் புது அனுபவம் கிடைக்கும். வீடு, வாகன பராமரிப்பை மேற்கொள்வீர்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சல், விரையம் ஏற்டும். ஒருவித பதற்றம் காணப்படும்.
ரிஷபம்: நீண்டநாள் பிரச்சினைகளுக்கு சுமுகத் தீர்வு கிடைக்கும். தைரியமாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். மனைவிவழி உறவினர்களுடன் இருந்து வந்த ஈகோ பிரச்சினைகள் நீங்கும்.
மிதுனம்: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். எதிர்பார்த்த இடத்திலிருந்து பணம் வரும். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் உண்டாகும். அக்கம்பக்கத்தினர் ஆதரவாக இருப்பார்கள்.
கடகம்: உடல் உஷ்ணத்தால் சில அவஸ்தைகள் ஏற்படக் கூடும். முக்கிய பொருட்களை கவனமாக கையாளுங்கள். ஊர் பொது விஷயங்களை முன்னின்று நடத்துவீர்கள். வாகனம் செலவு வைக்கும்.
சிம்மம்: அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு. அரசு அதிகாரிகள் உதவிகரமாக இருப்பார்கள். திடீர் செலவுகள் ஏற்படும். நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் விரும்பி வந்து பேசுவார்கள்.
கன்னி: எதையும் தாங்கும் மனவலிமை கிட்டும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். எதிர்ப்புகள், ஏமாற்றங்களை முறியடித்து வெற்றி பெறுவீர்கள். சகோதரர்களும் பக்கபலமாக இருப்பார்கள்.
துலாம்: எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தெளிவான முடிவுகளால் தொல்லைகள் நீங்கும். குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள்.
விருச்சிகம்: சவாலான விஷயங்களையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். திடீர் செலவுகள் ஏற்படக்கூடும். பால்ய நண்பர்கள், உறவினர்கள் நீண்ட நாட்களுக்குப் பின்னர் தொடர்பு கொள்வார்கள்.
தனுசு: வெளியிடங்களுக்கு செல்வதை தவிர்த்து விடுங்கள். புதிய வேலை தொடர்பான காரியங்களில் இழுபறி நீடிக்கும். கணவன் - மனைவிக்கு இடையே கருத்துவேறுபாடு ஏற்படலாம்.
மகரம்: இங்கிதமாகவும், இதமாகவும் பேசி எல்லோரையும் கவருவீர்கள். உறவினர்களால் ஆதாயம் கிடைப்பதுடன் கவுரவமும் உயரும். வீடு, மனை வாங்குவது குறித்து ஆலோசிப்பீர்கள்.
கும்பம்: சாதுர்யமாகச் செயல்பட்டு காரியங்களை முடித்துக் காட்டுவீர்கள். கைமாற்றாக வாங்கியிருந்த தொகையை திருப்பி தருவீர்கள். எதிர்பார்த்த இடத்தில் இருந்து பணம் வரும்.
மீனம்: உங்களின் கல்வித் தகுதியை அதிகப்படுத்திக் கொள்ள திட்டமிடுவீர்கள். அறிஞர்களின் நட்பு கிடைக்கும். சகோதரர்களின் ஆதரவு உண்டு. சிலருக்கு பொறுப்புகள் தேடி வரும்.
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT