Published : 30 Apr 2020 08:03 AM
Last Updated : 30 Apr 2020 08:03 AM

இந்தநாள் உங்களுக்கு எப்படி? 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: பணப்புழக்கம் சரளமாக இருக்கும். கணவன் - மனைவிக்குள் இருந்துவந்த கருத்துவேறுபாடுகள் நீங்கும். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து உடன்பிறந்தோரிடம் ஆலோசிப்பீர்கள்.

ரிஷபம்: புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். நீண்டநாட்களாக தள்ளிப் போன காரியங்கள் மளமளவென்று முடியும். பேச்சில் சாதுர்யம் வெளிப்படும்.. பணவரவு திருப்தி தரும்.

மிதுனம்: உங்களின் ஆளுமைத் திறன், சாதுர்யம் பளிச்சிடும். அடகு வைத்திருந்த ஆபரணங்களை மீட்க திட்டமிடுவீர்கள். உறவினர்கள், நண்பர்களின் அன்புத் தொல்லைகள் விலகும்.

கடகம்: அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதிமொழியோ, உத்தரவாதமோ தரவேண்டாம். மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்காதீர்கள். உடல் நலத்தில் கவனம் செலுத்துங்கள்.

சிம்மம்: வீடு, மனை வாங்குவது, விற்பதில் அலட்சியம் காட்டாமல் கவனமுடன் செயல்படுங்கள். வேலைச்சுமை, மறைமுக எதிர்ப்பு, எதிர்பாராத செலவுகளை சமாளிக்க வேண்டியது வரும்.

கன்னி: எதிலும் வெற்றி பெறுவீர்கள். தைரியமாக சில முடிவுகள் எடுப்பீர்கள். எதிர்பாராத பணவரவு உண்டு. கணவன் - மனைவிக்குள் இருந்துவந்த சண்டை, சச்சரவுகள் நீங்கும்.

துலாம்: சவாலான காரியங்களையும் சாதுர்யமாக செயல்பட்டு முடித்துக் காட்டுவீர்கள்.. அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். எதிர்பாராத வகையில் பணவரவு உண்டு.

விருச்சிகம்: நேர்மறை எண்ணங்கள் தோன்றும். மூத்த சகோதரர் எல்லா வகையிலும் உதவிகரமாக இருப்பார். தாய்வழி உறவினர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். வாகனம் செலவு வைக்கும்.

தனுசு: முன்கோபம் அடிக்கடி தலைதூக்கும். எல்லா வகையிலும் கவனமுடன் செயல்படுங்கள்.. சொத்து வாங்குவது குறித்து ஆலோசிப்பீர்கள். உடன்பிறந்தவர்களை அனுசரித்து செல்வது நல்லது.

மகரம்: தேங்கிக் கிடந்த வேலைகள் திடீர் வேகமெடுக்கும். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் தொடர்பும் ஆதரவும் கிடைக்கும். குடும்பத்தில் குதூகலம் பிறக்கும்.

கும்பம்: சவால்களில் வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் இருந்துவந்த கூச்சல், குழப்பம் நீங்கி அமைதி திரும்பும். பிள்ளைகள் சூழ்நிலை அறிந்து பொறுப்புடன் நடந்த கொள்வார்கள்.

மீனம்: குடும்பத்தினரிடையே ஒற்றுமை நிலவும். கடனாகக் கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். மகளுக்கு எதிர்பார்த்ததைப் போல் நல்ல இடத்தில் மனதுக்குப் பிடித்த வரன் அமையும்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x