Published : 14 Apr 2020 09:15 AM
Last Updated : 14 Apr 2020 09:15 AM
மேஷம்: வெளியூரிலிருந்து எதிர்பார்த்த செய்தி வந்து சேரும். குடும்பத்தினருடன் கலந்துரையாடி முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள், நண்பர்களின் ஆதரவு கிட்டும்.
ரிஷபம்: குடும்ப அந்தரங்க விஷயங்களை வெளிநபர்களிடம் பகிராதீர்கள். பணப் பற்றாக்குறையால் பிறரிடம் கைமாற்றாக வாங்க வேண்டியது வரும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள்.
மிதுனம்: பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்பார்கள். வீட்டின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். வெளிவட்டாரத்தில் கவுரவம் கிட்டும். வாகனம் திடீர் செலவு வைக்கும்.
கடகம்: சகோதரர்களால் பயனடைவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. அக்கம்பக்கத்தினர் விவகாரங்களில் தலையிட வேண்டாம். பிள்ளைகளின் தேவைகளை உடனுக்குடன் பூர்த்தி செய்வீர்கள்.
சிம்மம்: உங்களின் முயற்சிகளுக்கு உறவினர்கள் ஒத்துழைப்பார் கள். சாதுர்யமாகப் பேசி காரியங்களை சாதிப்பீர்கள். கொஞ்சம் அலைச்சல் இருக்கும். உடல் நலத்தில் கவனம் தேவை.
கன்னி: எதிர்பார்த்த வேலைகள் உடனே முடியும். நண்பரால் ஆதாயம் உண்டு. குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். பிள்ளைகள் உங்கள் பேச்சுக்கு மதிப்பளிப்பார்கள். பணவரவு திருப்தி தரும்.
துலாம்: புது முயற்சிகளில் வெற்றி கிட்டும். குடும்பத்தில் குதூகலம் காணப்படும். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். பால்ய நண்பரை சந்திப்பீர்கள். அநாவசிய செலவுகளை தவிருங்கள்.
விருச்சிகம்: மனநிறைவுடன் சில காரியங்களை செய்வீர்கள். கணவன் - மனைவிக்குள் கருத்துவேறுபாடு நீங்கும். குலதெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றுவதற்கு திட்டமிடுவீர்கள்.
தனுசு: எடுத்த வேலையை முழுமையாக முடிக்க முடியாமல் திணறுவீர்கள். நண்பர்கள், உறவினர்களை அநாவசியமாக பகைத்துக் கொள்ள வேண்டாம். புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும்.
மகரம்: வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். எதிர்பார்த்த உதவிகள் தாமதமாகும். அநாவசிய செலவுகளை தவிர்க்கப் பாருங்கள். பழைய கடனைத் தீர்க்கும் வழிகளை யோசிப்பீர்கள்.
கும்பம்: குடும்பத்தில் குழப்பம் நீங்கி அமைதி நிலவும். தந்தைவழி உறவினரால் ஆதாயம் உண்டு. பிரபலங்களின் சந்திப்பு நிகழும். எந்தக் காரியத்தையும் தீர ஆலோசித்து முடிவெடுங்கள்.
மீனம்: ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். நம்பிக்கைக்குரியவர் களை ஆலோசித்து முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். முன்கோபம் குறையும். அக்கம்பக்கத்தினருடன் அளவுடன் பழகுங்கள்.
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT