Published : 04 Apr 2020 07:45 AM
Last Updated : 04 Apr 2020 07:45 AM
மேஷம்: உங்களின் உழைப்புக்கு ஏற்ற வருமானம் கிடைக்கும். குடும்பத்தில் உள்ளவர்களின் விருப்பு, வெறுப்பை அறிந்து அதற்கேற்ப அவர்களை நெறிப்படுத்துவீர்கள்.
ரிஷபம்: பழைய இனிய சம்பவங்களை அடிக்கடி நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் வரக்கூடும். இன்று அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு.
மிதுனம்: சகோதரர்களால் பயனடைவீர்கள். பூர்வீக சொத்து உங்கள் கைக்கு வரும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். புதிய நண்பர்கள் அறிமுகம் உண்டு.
கடகம்: பணப்புழக்கம் கணிசமாக உயரும். உடல் நிலை சீராகும். நேர்மறை சிந்தனைகள் பிறக்கும். கணவன் - மனைவிக்குள் இருந்துவந்த கருத்துவேறுபாடுகள் நீங்கும்.
சிம்மம்: வேலைகள் தடைபட்டு முடியும். சின்னச் சின்ன பிரச்சினைகள் குடும்பத்தில் தலைதூக்கும். தர்மசங்கடமான சூழ்நிலைகளில் அவ்வப்போது சிக்கித் தவிப்பீர்கள்.
கன்னி: தேவையற்ற அலைச்சலுக்கு ஆட்படுவீர்கள். பணப்பற்றாக்குறையால் பிறரிடம் கைமாற்றாக வாங்க வேண்டியது வரும். வெளியூர் பயணம் குறித்து திட்டமிடுவீர்கள்.
துலாம்: ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். அக்கம்பக்கத்தினரின் ஆதரவு உண்டு. பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள்.
விருச்சிகம்: தலைமை பொறுப்புகள் தேடி வரும். அரசாங்க அதிகாரிகளின் நட்பு கிட்டும். உறவினர்கள், நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து முக்கிய முடிவுகள் எடுப்பார்கள்.
தனுசு: திடீர் திருப்பங்கள் உண்டாகும். குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். இழுபறியாக இருந்த பணம் கைக்கு வரும்.
மகரம்: சிலரின் விமர்சனங்களுக்கும், கேலி பேச்சுக்கும் ஆளாவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களுடன் வளைந்து கொடுத்து செல்லுங்கள். அடுத்தவர் விவகாரங்களில் தலையிட வேண்டாம்
கும்பம்: நல்ல வாய்ப்புகள் தேடி வரும். சகோதரர் வகையில் ஒற்றுமை பிறக்கும். கல்யாணப் பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.
மீனம்: பிள்ளைகளால் உறவினர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். பழைய பிரச்சினையை பேச்சுவார்த்தையின் மூலம் தீர்ப்பீர்கள். நண்பர்கள் உதவி தக்க சமயத்தில் கிடைக்கும்.
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT