Published : 23 Mar 2020 08:05 AM
Last Updated : 23 Mar 2020 08:05 AM

இந்தநாள் உங்களுக்கு எப்படி? 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: வருங்காலத்துக்காக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வீட்டில் சுபகாரியங்களுக்கு ஏற்பாடாகும். கணவன் - மனைவிக்குள் மனம்விட்டுப் பேசுவீர்கள். கலைப்பொருட்கள் சேரும்.

ரிஷபம்: சில நாட்களாக நிலவிய மனஉளைச்சல், டென்ஷன் விலகும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். சொந்தபந்தங்களின் வருகையுண்டு. பழைய கடனை பைசல் செய்வீர்கள்.

மிதுனம்: விலை உயர்ந்த ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை காணப்படும். பிள்ளைகள் நீண்டநாட்களாக கேட்டுக் கொண்டிருந்ததை வாங்கித் தருவீர்கள்.

கடகம்: கணவன் - மனைவிக்குள் வீண் விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். அக்கம்பக்கத்தினரின் ஆதரவு உண்டு.

சிம்மம்: குடும்ப வருமானத்தை உயர்த்த முற்படுவீர்கள். பூர்வீக சொத்தை விற்று புது வீடு, மனை வாங்குவீர்கள். வீட்டில் கல்யாணப் பேச்சுவார்த்தைகள் முன்னேற்றம் தரும்.

கன்னி: குலதெய்வப் பிரார்த்தனைகளை குடும்பத்துடன் சென்று நிறைவேற்றுவீர்கள். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. வீட்டை விரிவுபடுத்தி கட்ட திட்டமிடுவீர்கள்.

துலாம்: மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். கடனை தீர்க்க உதவிகள் கிடைக்கும். ஆடம்பர செலவுகளை குறைக்க முயற்சி செய்யுங்கள்.

விருச்சிகம்: மறைமுக எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். பூர்வீக சொத்து கைக்கு வரும். பணவரவு திருப்தி தரும். வாகனம் திடீர் செலவு வைக்கும்.

தனுசு: சவால்களில் வெற்றி பெறுவீர்கள். பணப்பற்றாக்குறை நீங்கும். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். சமூகத்தில் பிரபலமானவர்களின் நட்பு கிடைக்கும்.

மகரம்: அதிரடியான முன்னேற்றங்களைக் காண்பீர்கள். வாகனம், வீடு வசதி பெருகும். பிள்ளைகளால் சமூக அந்தஸ்து உயரும். விலகியிருந்த உறவினர்கள் சிலர் வலிய வந்து பேசுவார்கள்.

கும்பம்: வீண் டென்ஷன், முன்கோபம், செலவு வந்து போகும். பிள்ளைகளின் எண்ணங்களை பூர்த்தி செய்வீர்கள். எதிர்பாராத பணவரவு உண்டு. பால்ய நண்பரை சந்தித்து மகிழ்வீர்கள்.

மீனம்: அரசாங்க வேலைகளில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். அக்கம்பக்கத்து வீட்டாரின் ஆதரவு பெருகும். நீண்டநாள் பிரச்சினைகளுக்கு புதிய கோணத்தில் சுமுகத் தீர்வு காண்பீர்கள்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x