Published : 22 Mar 2020 09:24 AM
Last Updated : 22 Mar 2020 09:24 AM

இந்தநாள் உங்களுக்கு எப்படி? 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வெளிவட்டாரத்தில் உங்களின் செல்வாக்கு உயரும். புதிய பொறுப்புகள் தேடி வரும். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும்.

ரிஷபம்: கடந்தகால இனிய சம்பவங்கள் அவ்வப்போது மனதில் நிழலாடும். உறவினர்கள், நண்பர்கள் ஆதரவாகப் பேசத் தொடங்குவார்கள். சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரிய வரும்.

மிதுனம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். பாதியில் நின்ற வேலைகள் திடீரென முடியும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். அடுத்தவர் விவகாரங்களில் தலையிட வேண்டாம்.

கடகம்: சிலரின் விமர்சனங்களுக்கும், கேலி பேச்சுக்கும் ஆளாகக் கூடும். பிள்ளைகளிடம் கோபத்தைக் காட்ட வேண்டாம். பண விஷயத்தில் சாதுர்யமாகப் பேசி சமாளிப்பீர்கள்.

சிம்மம்: பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். உறவினர்களால் சில காரியங்கள் நிறைவேறும். விலை உயர்ந்த மின்சாதனங்கள் வாங்குவீர்கள்.

கன்னி: குடும்பத்தினரின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். கலைப்பொருட்கள் சேரும்.

துலாம்: மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். வாகனம் செலவு வைக்கும்.

விருச்சிகம்: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் எதிர்பார்த்ததைவிட அதிகரிக்கும்.

தனுசு: துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். மனைவிவழியில் அந்தஸ்து உயரும். மனதுக்கு மகிழ்ச்சியளிக்கும் செய்தி வரும்.

மகரம்: கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். கடன் தொகையை போராடி வசூலிப்பீர்கள். பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள்.

கும்பம்: வெளுத்ததெல்லாம் பாலாக நினைத்து பேசி ஏமாந்து விடாதீர்கள். உறவினர், நண்பர்களால் செலவினம் அதிகரிக்கும். யாருக்கும் உத்தரவாதமோ, உறுதிமொழியோ தரவேண்டாம்.

மீனம்: கணவன் - மனைவிக்குள் கருத்துவேறுபாடு வந்து நீங்கும். யாரையும் மனம்நோகும்படி எடுத்தெறிந்து பேசாதீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து போவது நல்லது.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x