Published : 21 Mar 2020 08:30 AM
Last Updated : 21 Mar 2020 08:30 AM

இந்தநாள் உங்களுக்கு எப்படி? 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: தொட்ட காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிட்டும். புதிய முயற்சிகள் பலிதமாகும். குடும்பத்தில் சுபகாரியங்களுக்கு ஏற்பாடாகும். ஆன்மிக காரியங்களை முன்னின்று நடத்துவீர்கள்.

ரிஷபம்: வெளிவட்டாரத்தில் மகிழ்ச்சி உண்டு. பிரபலங்களின் உதவி தக்க சமயத்தில் கிடைக்கும். அவர்களின் துணையுடன் சில காரியங்களை செய்து முடிப்பீர்கள். திடீர் பயணம் ஏற்படும்.

மிதுனம்: வீட்டை விரிவுபடுத்துவது, அழகுபடுத்துவது திட்டமிட்டபடி நிறைவேறும். சிலருக்கு அரசின் கவுரவப் பதவிகள் கிடைக்கும். இழந்ததைப் பெறுவீர்கள். சமூக அந்தஸ்து உயரும்.

கடகம்: ஆன்மிக பயணம் செல்வீர்கள். தியானம், யோகா ஆகியவற்றில் ஈடுபாடு அதிகரிக்கும். உங்களிடம் காணப்படும் அலட்சியப்போக்கால் சில சிக்கல்கள் வர வாய்ப்பிருக்கிறது.

சிம்மம்: தடைபட்ட வேலைகள் முழுமையடையும். நல்ல இடவசதியுடன் கூடிய வீட்டுக்கு குடி பெயர்வீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள்.

கன்னி: மறைமுக எதிரிகளைக் கண்டறிந்து ஒதுக்குவீர்கள். வேற்றுமதத்தவர்கள் உதவுவார்கள். நீண்டநாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த அயல்நாட்டுப் பயணம் சாதகமாக அமையும்.

துலாம்: தைரியம் பிறக்கும். மறைமுக எதிர்ப்புகளை சாதுர்யமாக வெல்வீர்கள். விஐபிக்களின் நட்பு கிடைக்கும். சொந்த ஊரில் மதிப்பு, மரியாதை கூடும். வாகனச் செலவு அதிகரிக்கும்.

விருச்சிகம்: நேர்மறை எண்ணம் தோன்றும். தூக்கமின்மை விலகும். தாயாரின் உடல்நலம் பாதிக்கக் கூடும். பயணங்களால் ஆதாயம் உண்டு. அடுத்தவர் விவகாரங்களில் தலையிட வேண்டாம்.

தனுசு: சகோதரர்களால் ஆதாயம் பெறுவீர்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வேற்று மதத்தவரால் நன்மை உண்டு. பழைய வாகனத்தை மாற்றி புது வாகனம் வாங்குவீர்கள்.

மகரம்: புதிய முயற்சிகளில் ஆர்வம் பிறக்கும். எப்பொழுதோ வரவேண்டிய பணம் இப்பொழுது வந்து உங்களுக்கு கைகொடுக்கும். குலதெய்வ கோயிலுக்கு குடும்பத்துடன் சென்று வருவீர்கள்.

கும்பம்: எதிர்பாராத உடல்நலக்குறை, மனச்சோர்வு, பதற்றம் வந்துபோகும். உடன்பிறந்தவர்களிடையே மனக்கசப்புகள் ஏற்படலாம். வீண் விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது.

மீனம்: சிலர் உங்கள் மீது வீண்பழி சுமத்துவார்கள். கோயில் விழாக்களை முன்னின்று நடத்துவீர்கள். பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். பால்ய நண்பரை சந்தித்து மகிழ்வீர்கள்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x