Published : 20 Mar 2020 08:50 AM
Last Updated : 20 Mar 2020 08:50 AM
மேஷம்: புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். கணவன் - மனைவிக்குள் நிலவிய கருத்துவேறுபாடுகள் நீங்கும். விருந்தினர், நண்பர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி தங்கும்
ரிஷபம்: தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு காரியங்களை சாதிப்பீர்கள். குடும்பத்தினருடன் இருந்துவந்த கசப்பு உணர்வு நீங்கும். பணவரவு எதிர்பார்த்ததைவிட அதிகமாக இருக்கும்.
மிதுனம்: சிலரின் விமர்சனங்கள், கேலி பேச்சுக்கு ஆளாவீர்கள். குடும்பத்தினருடன் அனுசரித்து செல்வது நல்லது. அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதிமொழியும் தர வேண்டாம்.
கடகம்: பழைய நல்ல சம்பவங்களை அடிக்கடி நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். மனக்குழப்பங்கள் நீங்கி தெளிவான முடிவெடுப்பீர்கள்.
சிம்மம்: பங்கு வர்த்தகம் மூலம் பணம் வரும். பழைய கடன் ஒருபுறம் இருக்க, சொத்து வாங்குவதற்காக மேலும் கடன் வாங்குவீர்கள். சிலர் வீடு மாறுவார்கள். கலைப்பொருட்கள் சேரும்.
கன்னி: முக்கிய விஷயங்களில் தைரியமான முடிவுகள் எடுத்து வெற்றியும் பெறுவீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள்.
துலாம்: நீண்டநாட்களாக விலகியிருந்த நண்பர்கள், உறவினர்களின் வருகையால் வீடு கலகலப்பாகும். குடும்பத்தினரின் எண்ணங்களை பூர்த்தி செய்வீர்கள். விஐபி தக்க சமயத்தில் உதவுவார்.
விருச்சிகம்: வெளிவட்டாரத்தில் மதிப்பு, மரியாதை உயரும். பணப்பற்றாக்குறை விலகும். மனதுக்குப் பிடித்தவர்களை சந்தித்து மகிழ்வீர்கள். பிள்ளைகளை நல்வழிப்படுத்துவீர்கள்.
தனுசு: நீங்கள் முன்பு செய்த உதவிகளுக்கு இப்பொழுது பாராட்டப்படுவீர்கள். உறவினர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். சகோதரர் வகையில் நன்மை பிறக்கும். திடீர் பயணம் ஏற்படும்.
மகரம்: பல வேலைகள் நீண்ட இழுபறிக்கு பின்னர் முடியும். சின்னச் சின்ன பிரச்சினைகள் குடும்பத்தில் தலைதூக்கும். தர்மசங்கடமான சூழ்நிலைகளில் அடிக்கடி சிக்கித் தவிப்பீர்கள்.
கும்பம்: வீண் அலைச்சல், ஏமாற்றம் ஏற்படக் கூடும். பிள்ளைகளின் உணர்வுகளை புரிந்து கொள்ளுங்கள். பணப்பற்றாக்குறையால் பிறரிடம் கைமாற்றாக வாங்க வேண்டியது வரும்.
மீனம்: சிந்தனைத் திறன் அதிகரிக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். பிள்ளைகளின் உடல்நலம் சீராக இருக்கும். பெற்றோர் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT