Published : 19 Mar 2020 09:45 AM
Last Updated : 19 Mar 2020 09:45 AM
மேஷம்: கடின உழைப்பால் காரியங்களை சாதிப்பீர்கள். மனதில் நிலவிய போராட்டங்கள் ஓயும். சமயோசிதமாகப் பேசி தடைபட்ட வேலைகளை சிறப்பாக முடித்து காட்டுவீர்கள்.
ரிஷபம்: பணவரவு திருப்திகரமாக இருக்கும். எதிர்ப்புகள் அகலும். முகப்பொலிவு, ஆரோக்கியம் கூடும். வீட்டில் சுபகாரியங்களுக்கு ஏற்பாடாகும். திடீர் பயணம் ஏற்படக் கூடும்.
மிதுனம்: எதிர்பாராத பயணங்களால் செலவுகள் அதிகரிக்கும். பணப் பற்றாக்குறையால் கடன் வாங்கும் சூழல் உண்டாகும். அக்கம்பக்கத்தினரின் செயல்பாடுகள் எரிச்சலை ஏற்படுத்தும்.
கடகம்: வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். பழைய நகைகளை விற்று நவீன நகைகள் வாங்குவீர்கள். விலகியிருந்த நண்பர்கள், உறவினர்கள் வீடு தேடி வருவார்கள்.
சிம்மம்: ஆடம்பரச் செலவுகளை குறைப்பீர்கள். பணம் வரும்போது அதை சேமிப்பதற்கான வழிமுறைகளையும் மேற்கொள்வது நல்லது. பழுதான மின்சாதனங்களை மாற்றுவீர்கள்.
கன்னி: வெளிவட்டாரத்தில் மதிப்பு, மரியாதை கூடும். பெரிய பதவிக்கு ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். தாயாரின் ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்கும். கலைப்பொருட்கள் சேரும்.
துலாம்: விருந்தினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் ஏற்படும். கனிவான பேச்சால் கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள்.
விருச்சிகம்: புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். நீண்டநாட்களாக எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். வருங்காலத்துக்காக சேமிக்கத் தொடங்குவீர்கள். பால்ய நண்பரை சந்திப்பீர்கள்.
தனுசு: குடும்பத்தில் நிலவிய குழப்பம் நீங்கி அமைதி பிறக்கும். உங்கள் ஆலோசனையை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள். அனுபவப்பூர்வமாகவும், எதார்த்தமாகவும் பேசுவீர்கள்.
மகரம்: வேலைச் சுமையால் சோர்வு ஏற்படும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களை அனுசரித்து செல்லுங்கள். அடுத்தவர் விவகாரங்களில் தலையிட வேண்டாம். வாகனம் திடீர் செலவு வைக்கும்.
கும்பம்: அலைச்சல், எதிர்பாராத பயணம், தவிர்க்க முடியாத செலவுகள் ஏற்படக் கூடும். நீண்டகாலமாக தொல்லைதரும் பிரச்சினைக்கு சுமுக தீர்வு காண முயற்சியுங்கள்.
மீனம்: பல வகைகளில் பணவரவு உண்டு. வருங்காலத் திட்டங்களில் ஒன்று நிறைவேறும். கவுரவப் பொறுப்புகள் தேடி வரும். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் மதிப்பு உயரும்.
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT