Published : 17 Mar 2020 09:30 AM
Last Updated : 17 Mar 2020 09:30 AM

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளை பொறுப்பாக வளர்க்க வேண்டும் என எண்ணுவீர்கள்.

ரிஷபம்: குடும்பத்தில் பல விஷயங்களையும் நீங்களே பார்க்க வேண்டியது வரும். தர்மசங்கடமான சூழ்நிலைகளில் அவ்வப்போது சிக்கி தவிப்பீர்கள். திடீர் பயணம் ஏற்படக் கூடும்.

மிதுனம்: எதிர்பார்த்த இடத்திலிருந்து பணம் வரும். புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். கணவன் - மனைவிக்குள் மனம்விட்டுப் பேசுவீர்கள். உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிட்டும்.

கடகம்: திறமையுடன் செயல்பட்டு சில காரியங்களை முடிப்பீர்கள். மனதில் நிலவிய குழப்பங்கள் நீங்கும். வேற்றுமதத்தினரால் நன்மை கிட்டும். முன்கோபம், வீண் அலைச்சல் விலகும்

சிம்மம்: நீண்டகால கடனை பைசல் செய்வதற்கான வழி பிறக்கும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். வீண் டென்ஷன், அலைச்சல் நீங்கும். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள்.

கன்னி: வெளியூரிலிருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும். குடும்பத்தினருடன் ஆலோசித்து முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். ஆடம்பரச் செலவுகளை தவிர்ப்பது நல்லது.

துலாம்: எதிர்காலத்துக்கான முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். தாய்வழி உறவினரால் நன்மையுண்டு. பிரியமானவர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள்.

விருச்சிகம்: சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். கணவன் - மனைவிக்குள் நிலவிய கருத்துவேறுபாடு நீங்கும். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். பயணங்கள் மகிழ்ச்சி தரும்.

தனுசு: அலைச்சல், வேலைச்சுமையால் சோர்வாக காணப்படுவீர்கள். குடும்பத்தில் ஈகோ பிரச்சினை தலைதூக்கும். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது.

மகரம்: நவீன மின்சாதனங்கள் வாஙகுவீர்கள். யாருக்கும் பணம், வாங்கித் தருவதில் தலையிட வேண்டாம். சுபச்செலவு அதிகரிக்கும். வீடு, மனை வாங்குவது குறித்து ஆலோசிப்பீர்கள்.

கும்பம்: எண்ணம்போல் செயல்பட வேண்டும் என்று எண்ணுவீர்கள். குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும். சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு சுமுக தீர்வு ஏற்படும். கலைப்பொருட்கள் சேரும்.

மீனம்: மனதில் பட்டதை பளிச்சென்று பேசி அனைவரையும் ஆச்சரியப்படுத்துவீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்பு மேலோங்கும். விருந்தினர், நண்பர்கள் வருகையால் வீடு களைகட்டும்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x