Published : 19 Nov 2025 05:55 AM
Last Updated : 19 Nov 2025 05:55 AM

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 19 நவம்பர் 2025

மேஷம்: குடும்பத்தினரிடம் கோபத்தை காட்டாதீர்கள். பிள்ளைகளின் படிப்பு தொடர்பாக செலவு, அலைச்சல், டென்ஷன் இருக்கும். வாகனத்தில் நிதானம் அவசியம். வியாபாரத்தில் போட்டிகள் கூடும். புதிய யுக்திகளைக் கையாள்வீர். அலுவலகத்தில் மேலதிகாரி பாராட்டுவார்.

ரிஷபம்: நம்பிக்கைக்கு உரியவர்களை ஆலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர். தம்பதிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். பழைய நண்பர்கள் வீடு தேடி வருவார்கள். வாகனத்தை மாற்றுவீர்கள். வியாபாரத்தில் லாபமுண்டு. அலுவலகத்தில் விவாதங்களை தவிர்ப்பது நல்லது.

மிதுனம்: புது முயற்சிகளில் ஈடுபடுவீர். குடும்பத்தில் உங்கள் கைஓங்கும். குலதெய்வம் கோயிலுக்கு சென்று பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர். அலுவலகத்தில் சக ஊழியர் மத்தியில் மதிப்பு உயரும். மேலதிகாரி ஆதரவு தருவார்.

கடகம்: மறைமுக எதிர்ப்புகள் விலகும். உங்களின் செயலை பார்த்து மற்றவர்கள் வியப்பர். குழப்பம் நீங்கி குடும்பத்தில் நிம்மதி தங்கும். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து நடந்து கொள்ளவும். வியாபாரத்தில் புது இடத்துக்கு கடையை மாற்றுவீர். உத்தியோகம் சிறக்கும்.

சிம்மம்: நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர். தம்பதிக்குள் இருந்த ஈகோ பிரச்சினை தீர்ந்து சந்தோஷம் நிலைக்கும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வர். வியாபாரத்தில் பணியாட்களின் ஆதரவுண்டு. அலுவலக ரீதியாக பயணங்கள் மேற்கொள்ள வேண்டிவரும்.

கன்னி: குழப்பம் நீங்கி மனதில் தெளிவு பிறக்கும். உடன் பிறந்தவர்களால் ஆதாயமுண்டு. பிள்ளைகள் பொறுப்பு உணர்ந்து செயல்படுவர். தாயாரின் உடல்நலம் நிம்மதி தரும். வியாபாரத்தை பெரிய அளவில் விரிவுபடுத்த முயற்சிப்பீர். அலுவலகத்தில் மேலதிகாரி பாராட்டுவார்.

துலாம்: காரணம் இல்லாமல் முன்கோபம், டென்ஷன் இருக்கும். பிள்ளைகளின் பிடிவாதம் கூடும். கொஞ்சம் விட்டுப் பிடிக்கவும். வியாபாரத்தில் பழைய பாக்கியை போராடி வசூலிப்பீர்கள். பங்குதாரர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். அலுவலகத்தில் பணிச்சுமை கூடும்.

விருச்சிகம்: எதிர்பார்த்த பணிகள் தடையின்றி முடியும். மகளுக்கு நல்ல வரன் அமையும். தூக்கமின்மை, மன உளைச்சல் நீங்கும். தாய்வழி உறவினர்கள் உதவி நாடி வருவர். வியாபாரத்தில் புதிய பங்குதாரர்கள் கிடைப்பர். அலுவலகத்தில் குழப்பங்கள் நீங்கி நிம்மதி பிறக்கும்.

தனுசு: தெளிவாக பேசி சில வேலைகளை முடித்துக் காட்டுவீர். தம்பதிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். உடன் பிறந்தவர்களால் ஆதாய முண்டு. வங்கிக் கடனை பைசல் செய்வீர். உத்தியோகம் சிறக்கும். வியாபாரத்தில் புதிய யுக்திகளை கையாண்டு அனைவரையும் கவருவீர்.

மகரம்: உங்களின் அணுகுமுறையை மாற்றி தடைபட்ட வேலையை முடிப்பீர்கள். சகோதரியின் விசேஷத்துக்கு அதிகம் உழைப்பீர். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து நடந்து கொள்ளவும். வியாபாரரீதியாக பிரபலங்களை சந்திப்பீர். அலுவலகத்தில் உங்கள்திறமை வெளிப்படும்.

கும்பம்: மற்றவர்களின் ரசனைக்கேற்ப செயல்படுவீர். உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிப்பு உயரும். ஊர் நிகழ்ச்சிகளுக்கு தலைமை தாங்குவீர். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் புதிய பதவிக்கு பரிந்துரை செய்யப்படுவீர். பொறுப்பு கூடும்.

மீனம்: குடும்பத்துடன் குலதெய்வம் கோயிலுக்கு சென்று வருவீர்கள். பிள்ளைகளின் உடல்நலம் சீராகும். வாகனத்தை மாற்றுவீர்கள். வியாபாரத்தை பெரியளவில் விரிவுபடுத்துவீர். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலையுண்டு என்று இருக்க பழகிக் கொள்வது நல்லது.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x