Published : 17 Nov 2025 06:29 AM
Last Updated : 17 Nov 2025 06:29 AM
மேஷம்: எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியவில்லையே என்ற ஆதங்கம் நீங்கும். பல வகையிலும் பணம் வரும். வீண் செலவைக் கட்டுப்படுத்தி, சேமிப்பீர்கள். தாய்வழி சொந்தங்கள் ஆதரவாக இருப்பார்கள். தொழில், வியாபாரத்தில் போட்டிகளைத் தகர்ப்பீர்கள்.
ரிஷபம்: கடந்தகால நினைவுகளால் மனதில் சந்தோஷம் பொங்கும். பழுதான வீடு, வாகனத்தை சரிசெய்வீர்கள். பிள்ளைகள் கேட்டதை வாங்கித்
தருவீர்கள். அலுவலகப் பணியை திறம்பட முடித்து பாராட்டு பெறுவீர்கள். நாடி வந்தவர்களுக்கு, உங்களால் இயன்ற உதவியைச் செய்வீர்கள்.
மிதுனம்: குழப்பங்களுக்குத் தீர்வு கிடைக்கும். மனதில் புது நம்பிக்கை பிறக்கும். கணவன் - மனைவிக்குள் மனஸ்தாபங்கள் நீங்கி, அன்யோன்யம் பிறக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டு. பழுதான வாகனத்தை மாற்றி, புதிதாக வாங்குவீர்கள். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும்.
கடகம்: நம்பிக்கை, உற்சாகத்துடன் செயல்பட்டு முக்கிய வேலைகளை முடிப்பீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். வியாபாரத்தில் பணியாளர்களை அனுசரித்துச் செல்வது அவசியம். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். யாரையும் எடுத்தெறிந்து பேசக் கூடாது.
சிம்மம்: வெளி வட்டாரத்தில் மதிப்பு, மரியாதை உயரும். பெரிய பதவிக்கு உங்கள் பெயர் சிபாரிசு செய்யப்படும். பெற்றோர் உடல்நலம் திருப்திகரமாக இருக்கும். மருத்துவச் செலவுகள் படிப்படியாக குறையும். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்களை பேசி சமாளிப்பீர்கள்.
கன்னி: குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். கையில் காசு பணம் புரளும். புதிய நண்பர்களின் அறிமுகமும், அதனால் ஆதாயமும் கிடைக்கும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். வராது என்று நினைத்த பழைய பாக்கிகள் வசூலாகும்.
துலாம்: கணவன் - மனைவிக்குள் தேவையற்ற வாக்குவாதம் வந்துபோகும். வியாபாரத்தில் பழைய பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். அக்கம் பக்கத்தினர் ஆதரவாக இருப்பார்கள். நீண்டகால பிரார்த்தனைகள் நல்லபடியாக நிறைவேறும். வெளியூர் பயணத்தால் அனுகூலம் உண்டு.
விருச்சிகம்: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். பிள்ளைகள் பொறுப்பை உணர்ந்து நடப்பார்கள். உத்யோகத்தில் உயர் அதிகாரி நேசக்கரம் நீட்டுவார். ஆன்மிகம், தியானம், யோகாவில் ஈடுபாடு ஏற்படும். பால்ய நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள்.
தனுசு: எதிர்பார்த்திருந்த பணம் கைக்கு வருவதால் மகிழ்ச்சி அதிகரிக்கும். மனைவி வழியில் மரியாதை, அந்தஸ்து உயரும். பெற்றோரின் விருப்பத்தை அறிந்து நிறைவேற்றுவீர்கள். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். பெரியவர்கள், மகான்களின் ஆசி கிடைக்கும்.
மகரம்: சொந்த ஊரில் மதிப்பு, அந்தஸ்து கூடும். பொதுக் காரியங்களை நல்லபடியாக செய்து முடித்து பாராட்டு பெறுவீர்கள் கவுரவப் பதவிகள் தேடி வரும். சகோதர, சகோதரிகளுடன் இருந்த மனத்தாங்கல் நீங்கும். பங்குச் சந்தை, நிலம் விற்பனையால் பணம் வரும்.
கும்பம்: பழைய பிரச்சினைகளை சுமுகமாகப் பேசித் தீர்ப்பீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். கையில் காசு பணம் புரளும். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். வேலையாட்கள் ஆதரவாக இருப்பார்கள். புதிய பதவி, பொறுப்புகள் தேடி வரும்.
மீனம்: எக்காரியத்திலும் நிதானம், பொறுமை தேவை. யாரிடமும் வாக்குவாதம் செய்ய வேண்டாம். குடும்பத்தில் மூத்தோர்களின் அறிவுரையைக் கேட்டு நடப்பது நல்லது. வாகனம் செலவு வைக்கும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் தேங்கும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும்.
| ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT