Published : 15 Nov 2025 06:18 AM
Last Updated : 15 Nov 2025 06:18 AM

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 15 நவம்பர் 2025

மேஷம்: பழைய நண்பர்கள் தேடி வருவர். குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு அதற்கு ஏற்ப உங்களை மாற்றிக் கொள்வீர். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து நடந்து கொள்ளவும். வியாபாரத்தில் லாபம் உண்டு. அலுவலகத்தில் விவாதங்களை தவிர்க்கவும்.

ரிஷபம்: விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தம்பதிக்குள் இருந்த பனிப்போர் மறையும். பழைய பொருட்களை மாற்றுவீர். வியாபாரத்தில் லாபமுண்டு. புதிய யுக்திகளை கையாண்டு வாடிக்கையாளர்களை கவருவீர். அலுவலகத்தில் மதிப்பு, மரியாதை கூடும்.

மிதுனம்: கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். தம்பதிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பிள்ளைகளின் சாதனைகளால் பெருமையடைவீர். உடல்நலத்தில் அதிக அக்கறை செலுத்தவும். உடன்பிறந்தவர்கள் உதவிகரமாக இருப்பார்கள். வியாபாரம், உத்தியோகம் சிறக்கும்.

கடகம்: கூடுதலான பணவரவால் வீட்டிலுள்ள பழைய பொருட்களை மாற்றுவீர்கள். அக்கம் பக்கத்தினரின் அன்புத் தொல்லை நீங்கும். உத்தி யோகத்தில் உயரதிகாரி பாராட்டும்விதமாக நடப்பீர். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். பங்குதாரர்களை பகைத்துக் கொள்ளாதீர்.

சிம்மம்: திட்டமிட்ட வேலையை குறித்த நேரத்தில் செய்து முடிப்பீர். வழக்குகளில் வெற்றி பெறுவீர்கள். உங்களால் பயனடைந்தோர் இப்போது உங்களுக்கு உதவி செய்வர். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாதீர்.

கன்னி: பிள்ளைகளின் படிப்பு தொடர்பாக அலைச்சல், விரயச் செலவுகள் வரக்கூடும். குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போவது நல்லது. அலுவலகத்தில் தானுண்டு தன் வேலையுண்டு என்று இருக்க பழகிக் கொள்ளவும். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள்.

துலாம்: குடும்பத்தில் நிலவி வந்த குழப்பம் விலகும். பணவரவு திருப்திகரமாக அமையும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர். அலுவலகத்தில் சக ஊழியர்கள் மத்தியில் மதிப்பு உயரும். யாரைப் பற்றியும் தலைமையிடத்தில் புகார் கூறிக் கொண்டிருக்காதீர்கள்.

விருச்சிகம்: முகமலர்ச்சியுடன் காணப்படுவீர். பூர்வீக சொத்து வழக்கில் உடன்பிறந்தவர்களின் ஆதரவு உண்டு. வியாபாரம் சூடு பிடிக்கும். புதிய இடத்துக்கு கடையை மாற்றுவீர். அலுவலகத்தில் மேலதிகாரிகள் பாராட்டுவர். சக ஊழியருடன் இணக்கமாக செயல்படுவது நல்லது.

தனுசு: பழைய வழக்குகளை இப்போது பேசித் தீர்ப்பீர். பணவரவால் மனநிம்மதியுண்டு. வியாபாரத்தை பெரிய அளவில் விரிவுபடுத்த முற்படுவீர்கள். பங்குதாரர்களின் ஆலோசனைகளை அலட்சியப்படுத்த வேண்டாம். அலுவலகத்தில் தொல்லை தந்த அதிகாரி ஆதரவு தருவார்.

மகரம்: இழுபறியாக இருந்த பணிகள் நிறைவடையும். தந்தையாருடன் இருந்து வந்த பனிப்போர் விலகும். வியாபாரத்தில் பழைய சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் தென்படும். சக ஊழியர்கள் மதிப்பார்கள்.

கும்பம்: தம்பதிக்குள் சின்னச் சின்ன கருத்துமோதல் வரக்கூடும். பிள்ளைகளின் உடல்நலத்தில் அக்கறை காட்டவும். வியாபாரத்தில் பாக்கிகளை வசூலிப்பீர்கள். அலுவலகத்தில் தலைமையிடத்தின் கவனத்தை ஈர்த்து காரியம் சாதிப்பீர். மேலதிகாரிகளின் பாராட்டு கிட்டும்.

மீனம்: தள்ளிப் போய் கொண்டிருந்த சுபநிகழ்ச்சிக்கு நாள் குறிப்பீர். பணவரவு திருப்தி தரும். முன்கோபத்தை தவிர்ப்பீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துக் கொள்வீர்கள். புதிய சலுகைகளை அறிவிப்பீர். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்ப்பீர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x