Published : 09 Oct 2025 06:17 AM
Last Updated : 09 Oct 2025 06:17 AM
மேஷம்: நீண்ட நாளாக எதிர்பார்த்திருந்த செய்திகள் வீடு தேடி வரும். தம்பதிக்குள் நெருக்கம் கூடும். மூத்த சகோதர சகோதரிகளின் உதவி கிடைக்கும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் வருவர். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் தென்படும்.
ரிஷபம்: குடும்பத்தில் விட்டுக் கொடுத்துப் போகவும். பிள்ளைகளுக்கு காய்ச்சல், வயிற்றுவலி வரக்கூடும். வியாபாரத்தில் திடீர் முடிவுகள் வேண்டாம். புதிய பங்குதாரர்களின் ஆலோசனைகளை கேட்டு நடந்து கொள்ளவும். உத்தியோகம் சிறக்கும்.
மிதுனம்: புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பிள்ளைகளின் உயர்கல்வி, வேலை குறித்து யோசிப்பீர்கள். வேற்று மொழி பேசுபவர்களால் ஆதாயம் கிடைக்கும். வியாபாரத்தை பெரிய அளவில் விரிவுபடுத்துவீர். அலுவலகத்தில் மதிப்பு, மரியாதை உயரும்.
கடகம்: நீண்ட நாள் முயற்சிக்கு இப்போது பலன் கிட்டும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர். அலுவலகத்தில் மேலதிகாரிகள் பாராட்டுவர். வியாபார ரீதியாக பயணம் மேற்கொள்வீர்கள்.
சிம்மம்: குடும்பத்தினரின் விருப்பங்களை கேட்டறிந்து நிறை வேற்றுவீர்கள். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வர். உறவினர், நண்பர்கள் வீடு தேடி வருவர். திட்டமிட்டபடி அலுவலகரீதியான பயணங்கள் அமையும். வியாபாரத்தில் ஏற்றம் உண்டு.
கன்னி: பழைய நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் வெற்றி பெறுவீர். வேற்றுமதத்தவர், வேறு மொழி பேசுபவர்கள் உதவுவர். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டு. வியாபாரத்தில் போட்டிகளை தகர்த்தெறிவீர்.
துலாம்: யோகா, ஆன்மிகத்தில் ஈடுபாடு கூடும். பழைய பிரச்சினைகளை தீர்க்க வழி பிறக்கும். வியாபாரத்தில் புதிய யுக்திகளைக் கையாண்டு வாடிக்கையாளர்களைக் கவருவீர். அலுவலகத்தில் மற்ற ஊழியர்களைப் பற்றி குறை கூற வேண்டாம்.
விருச்சிகம்: தாயாருடன் இருந்த மனத்தாங்கல் விலகும். அரசு அதிகாரிகளின் உதவியால் காரியங்களை முடிப்பீர். வியாபாரத்தில் பழைய சரக்குகள் அனைத்தும் விற்றுத் தீரும். அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் இணக்கமாக செயல்படுவது நல்லது.
தனுசு: சவாலில் வெற்றி பெறுவீர். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். முக்கிய பிரமுகர்கள், பிரபலங்கள் அறிமுகமாவர். வியாபாரம் சூடு பிடிக்கும். உத்தியோகத்தில் ஏற்றம் உண்டு.
மகரம்: பிரபலங்களை சந்திப்பீர். அரசு காரியங்களில் அனுகூலமான நிலை காணப்படும். அக்கம் பக்கத்தினர், தாய்வழி உறவினர்களுடன் இருந்த மனக்கசப்புகள் விலகும். வீட்டை அலங்கரிப்பீர். வியாபாரம் லாபம் தரும். அலுவலகத்தில் அமைதி காக்கவும்.
கும்பம்: அதிரடி திட்டங்களை தீட்டுவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். உங்களை தேடிவந்து சிலர் உதவி கேட்பர். வெளியூர் பயணங்களால் ஆதாயமுண்டு. வியாபாரத்தில் வெற்றி பெறுவீர். அலுவலகத்தில் புதிய பதவிக்கு பரிந்துரை செய்யப்படுவீர்.
மீனம்: எதார்த்தமான வார்த்தைகளால் சிலரை கவருவீர். பழைய கடனை பைசல் செல்வீர். உறவினர், நண்பர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவர். வழக்கில் வெற்றி பெறுவீர். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர். அலுவலக ரீதியாக பிரபலங்களை சந்திப்பீர்.
|
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT