Published : 08 Oct 2025 06:09 AM
Last Updated : 08 Oct 2025 06:09 AM
மேஷம்: குடும்பத்தினரை அனுசரித்துப் போகவும். அக்கம் பக்கத்தினரின் அன்புத் தொல்லை குறையும். வியாபாரரீதியாக முக்கிய பிரமுகர்களை சந்திக்க வேண்டிவரும். அலுவலகத்தில் பணிச்சுமை கூடும். மேலதிகாரிகள் பாராட்டுவர்.
ரிஷபம்: சுபச் செலவுகள் வரும். வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்குவீர். நல்ல இடவசதியுடன் கூடிய வீட்டுக்கு குடிபுகுவீர். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் தென்படும். வியாபாரத்தை பெரிய அளவில் விரிவுபடுத்துவீர்.
மிதுனம்: குழப்பம் நீங்கி குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். புது திட்டங்கள் தீட்டுவீர். யோகா, ஆன்மிகத்தில் ஈடுபாடு கூடும். வியாபாரத்தில் லாபம் உண்டு. உத்தியோகத்தில் இடமாற்றம் கிட்டும்.
கடகம்: மறைமுக எதிர்ப்புகளை வெல்வீர். தம்பதிக்குள் விட்டுக் கொடுத்துப் போகவும். ஈகோ பிரச்சினை தீர வழி பார்க்கவும். வெளியூரிலிருந்து நற்செய்தி வரும். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. வியாபாரம் சூடு பிடிக்கும்.
சிம்மம்: பூர்வீக சொத்து பிரச்சினைகளை பேசித் தீர்க்க வழி கிட்டும். பணப்பற்றாக்குறை நீங்கும். குலதெய்வம் கோயிலுக்கு குடும்பத்துடன் சென்று வருவீர். கூட்டுத் தொழிலில் லாபம் உண்டு. அலுவலகத்தில் அமைதி காப்பது நல்லது.
கன்னி: பிள்ளைகள் படிப்பு தொடர்பாக அலைச்சல், செலவு இருக்கும். வாகனத்தில் கவனம் அவசியம். வியாபாரத்தில் பணியாட்களால் தொந்தரவு வரும். வாடிக்கையாளர்களிடம் கனிவாக பேசவும். அலுவலக ரீதியாக பயணம் செல்வீர்.
துலாம்: குடும்பத்தினரை அனுசரித்து செயல்படவும். நண்பர்கள் உதவுவர். தம்பதிக்குள் ஈகோ பிரச்சினை வரும். அலுவலகத்தில் மதிப்பு, மரியாதை உயரும். வியாபாரரீதியாக முக்கிய பிரமுகர்களை சந்திக்கும் வாய்ப்பு உண்டாகும்.
விருச்சிகம்: பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். பிள்ளைகள் அன்பாக நடந்து கொள்வர். எதிர்பார்த்த இடத்திலிருந்து பணம் வரும். வியாபாரத்தை பெரிய அளவில் விரிவுபடுத்த சிலரின் உதவியை நாடுவீர்கள். உத்தியோகம் சிறக்கும்.
தனுசு: தம்பதிக்குள் நெருக்கம் உண்டாகும். வராது என்றிருந்த பணம் வரும். விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்ப்பது நல்லது.
மகரம்: எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். தந்தையின் உடல்நலம் சீராகும். பால்ய நண்பர்களை சந்திப்பீர்கள். வியாபாரத்தில் ஓரளவு லாபம் பார்ப்பீர். அலுவலகத்தில் புதிய பொறுப்புகளால் மகிழ்ச்சி அடைவீர். மேலதிகாரி பாராட்டுவார்.
கும்பம்: குடும்பத்தில் எல்லாவற்றையும் இழுத்துப் போட்டுப் பார்க்க வேண்டியிருக்கும். பழைய கடனை பைசல் செய்வீர். வியாபார போட்டிகளை எளிதாக சமாளிப்பீர். அலுவலகத்தில் புதிய பதவிக்கு பரிந்துரை செய்யப்படுவீர்கள்.
மீனம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பெரியோரின் ஆசி கிடைக்கும். பிள்ளைகளால் மனநிம்மதி கிட்டும். கல்யாண முயற்சி நல்ல விதத்தில் முடியும். அலுவலக ரீதியாக வெளியூர் பயணம் செல்வீர்கள். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள்.
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT