Published : 03 Oct 2025 06:17 AM
Last Updated : 03 Oct 2025 06:17 AM
மேஷம்: பழைய நண்பர்களின் வீட்டு விசேஷங்களில் கலந்து கொண்டு, நட்பை புதுப்பிப்பீர்கள். பிள்ளைகள் உடல்நலம் சீராகும். வாகனத்தால் இருந்த தொந்தரவு நீங்கும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும்.
ரிஷபம்: எதார்த்தமான பேச்சால் சுற்றி இருப்பவர்களை வசீகரிப்பீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். சொந்த பந்தங்கள் தேடி வருவார்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத்தீரும்.
மிதுனம்: நெடுநாளாக அடைக்க முடியாமல் இருந்த கடனை அடைக்கும் அளவுக்கு பணம் வரும். முன்கோபம் நீங்கும். மனைவியின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். வீட்டில் சுபநிகழ்ச்சிகள் ஏற்பாடாகும்.
கடகம்: வறட்டு கவுரவத்துக்காக சேமிப்புகளை கரைக்காதீர்கள். வேலைச்சுமை, திடீர் பயணம் வந்து போகும். கடன் பிரச்சினை அதிகமாகும். வியாபாரத்தில் நிதானம் தேவை. ஆன்மிக நாட்டம் கூடும்.
சிம்மம்: நீண்ட நாள் கனவுகள் நனவாகும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர்களால் ஆதாயமும் உண்டு. விலை உயர்ந்த மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் லாபம் கூடும்.
கன்னி: உற்றார், உறவினர்கள் உதாசீனம் செய்த நிலை மாறி, அவர்களே உங்களை வீடு தேடி வந்து பேசுவார்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். நீண்டகால பிரார்த்தனைகள் நிறைவேறும்.
துலாம்: தடைகள் உடைபடும். கணவன் - மனைவிக்குள் இருந்த பனிப்போர் விலகும். வருங்காலத்துக்கான முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வரவேண்டிய பணம் கைக்கு வரும். எதிலும் பொறுமை தேவை.
விருச்சிகம்: வியாபார ரீதியாக வெளியூர் பயணங்கள் மேற்கொள்வீர்கள். பண வரவு உண்டு. உங்களுடன் உறவாடிக் கொண்டே உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்களை கண்டறிந்து ஒதுக்குவீர்கள்.
தனுசு: பழைய சம்பவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். வீடு, வாகன பராமரிப்பு செலவுகள் அதிகரித்தாலும் சமாளிப்பீர்கள். பெற்றோர் உடல்நலம் சீராகும். தொழிலில் பழைய பாக்கி வசூலாகும்.
மகரம்: எடுத்த வேலையை அலைந்து திரிந்து முடிப்பீர்கள். மனைவி வழியில் விட்டுக்கொடுத்து செல்லுங்கள். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள். பேச்சில் நிதானம் தேவை.
கும்பம்: புதிதாக சிந்தித்து, முக்கிய பிரச்சினையை தீர்ப்பீர்கள். நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். பொருட்கள் சேரும்.
மீனம்: நீண்டநாட்களாக தடைபட்ட சுபநிகழ்ச்சிகள் கைகூடி வரும். பிள்ளைகள் மனம்விட்டுப் பேசுவார்கள். பண விஷயத்தில் கறாராக இருப்பீர்கள். தொழில், வியாபாரத்தை விரிவுபடுத்த முயற்சிப்பீர்கள்.
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT