Published : 01 Oct 2025 07:14 AM
Last Updated : 01 Oct 2025 07:14 AM
மேஷம்: வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். சிலர் உங்கள் உதவியை நாடுவர். முத்த சகோதரர் உங்களை புரிந்து கொள்வார். வியாபாரத்தில் பாக்கி வசூலாகும். குழப்பங்கள் நீங்கி அலுவலகத்தில் நிம்மதி உண்டு.
ரிஷபம்: தடைபட்டிருந்த காரியங்கள் நல்ல விதத்தில் முடிவடையும். பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் நல்ல தீர்வு காண்பீர். வியாபாரத்தில் போட்டி குறையும். அலுவலகத்தில் அமைதி காக்கவும்.
மிதுனம்: வெளிவட்டாரத்தில் நிதானமாக பழகவும். முன்கோபம் கூடும். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து நடந்து கொள்வீர். வியாபாரத்தில் பாக்கியை போராடி வசூலிப்பீர். அலுவலகத்தில் மதிப்பு, மரியாதை உயரும்.
கடகம்: புது சிந்தனையால் மனக்குழப்பம் விலகும். சேமிக்கும் அளவுக்கு பணம் வரும். பூர்வீக சொத்து பிரச்சினையில் நல்ல தீர்வு கிடைக்கும். குடும்பத்தில் நிம்மதியுண்டு. வியாபாரம், உத்தியோகம் சிறக்கும்.
சிம்மம்: விலையுயர்ந்த கலைப் பொருட்கள் வாங்குவீர். புது ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபமீட்டுவீர். வாகனப் பழுது விலகும். வியாபாரம், உத்தியோகத்தில் முன்னேற்றம் காண்பீர்.
கன்னி: திடீர் யோகம் உண்டாகும். வீட்டில் சுபநிகழ்ச்சி ஏற்பாடாகும். உறவினர்கள் உங்களை பற்றி பெருமை யாக பேசுவர். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்ப்பது நல்லது.
துலாம்: எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். பூர்வீக வீட்டை விரிவுபடுத்தி கட்டுவீர். அண்டை அயலாருடன் இருந்த மோதல் விலகும். வியாபாரம் சிறக்கும். அலுவலகத்தில் மேலதிகாரி பாராட்டுவார்.
விருச்சிகம்: பாதியில் நின்ற பணிகள் முடிவடையும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். புதிய பங்குதாரர்கள் ஒத்துழைப்பர். அலுவலகத்தில் உயரதிகாரி முக்கிய விஷயங்களை பகிரும் அளவுக்கு நெருக்கமாவீர்கள்.
தனுசு: பிள்ளைகள் படிப்பு தொடர்பாக அலைச்சல், டென்ஷன் வரக்கூடும். குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போகவும். அலுவலகரீதியான பயணம் அலைச்சல் தரும். வியாபாரத்தில் புது முடிவு எடுக்க வேண்டாம்.
மகரம்: எதிர்பார்த்த வகையில் உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போகவும். உடன் பிறந்தோர் உதவிகரமாக நடந்து கொள்வர். வியாபாரம் சூடு பிடித்து லாபம் தரும். அலுவலகத்தில் மதிப்புயரும்.
கும்பம்: குடும்பத்தினரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். வியாபாரத்தில் நல்ல லாபம் பார்க்கலாம். அலுவலகத்தில் புதிய பதவி கிடைக்கும்.
மீனம் : பழைய பொருட்களை மாற்றிவிட்டு புதியன வாங்குவீர். மனைவிவழியில் ஆதாயமுண்டு. வியாபாரத்தில் இழுபறியாக இருந்த தொகை வந்து சேரும். சரக்குகள் விற்று தீரும். அலுவலகத்தில் அமைதி காப்பீர்.
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT