Published : 30 Sep 2025 06:17 AM
Last Updated : 30 Sep 2025 06:17 AM
மேஷம்: சோர்வு நீங்கி புத்துணர்ச்சியுடன் இருப்பீர்கள். பழைய நண்பர்கள் தேடி வருவர். மனைவி விரும்பிய பொருட்களை வாங்கிக் கொடுப்பீர்கள். வியாபாரம் சூடு பிடிக்கும். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்க்கவும்.
ரிஷபம்: உறவினர் யாரையும் குறை சொல்லாதீர்கள். பிள்ளைகளின் பிடிவாதம் கூடும். வாகனம் செலவு வைக்கும். வியாபாரத்தில் போட்டி இருக்கும். அலுவலக ரீதியாக வெளியூர் பயணங்கள் மேற்கொள்வீர்கள்.
மிதுனம்: நீண்ட நாள் விருப்பம், கனவு நிறைவேறும். கையிருப்பு கரையும். வாகனத்தில் கூடுதல் கவனம் செலுத்தவும். வியாபாரரீதியாக முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர். அலுவலகத்தில் தேடிய ஆவணம் தென்படும்.
கடகம்: குடும்பத்தில் இருந்த சலசலப்புகள் நீங்கி கனிவான பேச்சுவார்த்தைகள் இருக்கும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர். அலுவலகத்தில் விரும்பிய இடத்துக்கு மாற்றல் கிட்டும்.
சிம்மம்: எல்லா வகையிலும் வெற்றி உண்டு. எதிரிகள் கனிவாக பேசி சமாதானத்துக்கு வருவர். குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். நல்ல செய்தி வந்து சேரும். வியாபாரம், உத்தியோகத்தில் முன்னேற்றம் காண்பீர்.
கன்னி: சொன்ன சொல்லை நிறைவேற்றுவீர். உடன் பிறந்தோரின் ஆதரவு உண்டு. தந்தையின் உடல்நிலை சீராகும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் வருவர். உத்தியோகத்தில் பொறுப்பு, பதவி தேடி வரும்.
துலாம்: பிரபலங்கள் அறிமுகமாவார்கள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். பிள்ளைகள் மத்தியில் உங்கள் வார்த்தைக்கு மரியாதை கூடும். அலுவலகத்தில் பணிச் சுமை குறையும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள்.
விருச்சிகம்: நினைத்த காரியங்கள் நிறைவேறும். புது முயற்சிகளில் வெற்றி காண்பீர். தம்பதிக்குள் இருந்த மனக்கசப்புகள் விலகும். வியாபாரரீதியாக வெளியூர் பயணங்கள் செல்வீர்கள். உத்தியோகம் சிறக்கும்.
தனுசு: அலைச்சல், காரியத் தடைகள் வரக் கூடும். வெளிவட்டாரத்தில் நிதானம் தேவை. தாயாரின் உடல் நிலை தேறும். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் கிடைக்கும்.
மகரம்: குடும்பத்தில் உங்களின் வார்த்தைக்கு மதிப்பு, மரியாதை கூடும். வெளிவட்டாரத்தில் கவுரவ பதவிகள் தேடி வரும். அலுவலகத்தில் மகிழ்ச்சிகரமாக சூழல் நிலவும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஆதரவு தருவர்.
கும்பம்: தடைபட்டு கொண்டிருந்த சுபகாரியம் கைகூடி வரும். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர். வியாபாரம் சூடு பிடிக்கும். அலுவலகத்தில் புதிய பதவி கிடைக்கும்.
மீனம்: இங்கிதமாகப் பேசி கடினமான காரியங்களை சாதிப்பீர். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வர். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் யாரைப் பற்றியும் புகார் கூறிக் கொண்டிருக்காதீர்கள்.
|
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT