Published : 29 Sep 2025 06:32 AM
Last Updated : 29 Sep 2025 06:32 AM
மேஷம்: பண வரவு கூடும். குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் கூடும். பிள்ளைகளுடன் நேரம் செலவழிப்பீர்கள். சுற்றுலா பயணம் திருப்தி தரும்.
ரிஷபம்: எடுத்த வேலையை முடிக்க அதிகம் உழைக்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் விட்டுக்கொடுத்து செல்வது அவசியம். பயணத்தில் அதிக கவனம் தேவை. ஆன்மிக நாட்டம் கூடும்.
மிதுனம்: திருமணப் பேச்சுவார்த்தை சுமுகமாக முடியும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். உறவினர்களுடன் இருந்த மனத்தாங்கல் நீங்கும். பழுதான வாகனம் சரியாகும்.
கடகம்: வீண் குழப்பங்கள் விலகும். வீட்டில் நிம்மதி பிறக்கும். எதிர்பாராத பணவரவு இருக்கும். பழைய கடன் பிரச்சினையை தீர்க்க வழி பிறக்கும். சகோதர வகையில் சுபச் செலவு உண்டு. உடல்நலம் சீராகும்.
சிம்மம்: கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். வெளி வட்டாரத்தில் மகிழ்ச்சி தங்கும். தள்ளிப்போன காரியங்கள் உடனே முடியும். அலுவலகத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள்.
கன்னி: சோர்வு, களைப்பு நீங்கி, உற்சாகம், தோற்றப் பொலிவு அதிகரிக்கும். வங்கிக் கடன் உதவிகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். புதிய வாகனம் வாங்குவீர்கள்.
துலாம்: தடைபட்ட காரியங்கள் நல்லபடியாக முடியும். வேலைக்கு விண்ணப்பித்து காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும்.வெளியூர் பயணங்கள் சாதகமாகும்.
விருச்சிகம்: புதிய முயற்சிகள் வெற்றியடையும். வீட்டில் சந்தோஷம் நிலைக்கும். உறவினர், நண்பர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும். கோபம் குறையும். முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைக்கும்.
தனுசு: முன்கோபத்தை தவிர்த்து, உணர்ச்சி வசப்படாமல் இருப்பது அவசியம். அறிவுப்பூர்வமாக முடிவெடுங்கள். குடும்பத்தில் நிம்மதி உண்டு. பழுதான வாகனத்தால் கையிருப்பு கரையும்.
மகரம்: சவாலான காரியங்களையும் சர்வ சாதாரணமாக முடிப்பீர்கள். செல்வம், செல்வாக்கு கூடும். போட்டிகள், விவாதங்களில் வெற்றி கிடைக்கும். விஐபிக்களால் ஆதாயம் உண்டு.
கும்பம்: நம்பிக்கை, தைரியம் கூடும். கேட்ட இடத்தில் உதவி கிடைக்கும். சாதுர்யமாக பேசி காரியம் சாதிப்பீர்கள். எதிர்பாராத வகையில் பணம் வரும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள்.
மீனம்: பால்ய நண்பர்கள், உறவினர்கள் தக்க சமயத்தில் உதவுவார்கள். பழைய கடனைப் பற்றி யோசிப்பீர்கள். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் நிம்மதி உண்டு.
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT