Published : 27 Sep 2025 06:22 AM
Last Updated : 27 Sep 2025 06:22 AM
மேஷம்: காரியத் தடை, அலைச்சல் வந்து போகும். குடும்பத்தினரால் செலவுண்டு. வியாபாரத்தில் பழைய பாக்கிகளை போராடி வசூலிப்பீர். அலுவலகரீதியாக பயணம் மேற்கொள்வீர். மேலதிகாரிகள் பாராட்டுவர்.
ரிஷபம்: மற்றவர்களின் ரசனைக்கேற்ப செயல்படுவீர். உறவினர்கள் உங்களை பெருமையாக பார்ப்பார்கள். ஊர் நிகழ்ச்சிகளுக்கு தலைமை தாங்குவீர். வியாபாரம் சிறக்கும். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்க்கவும்.
மிதுனம்: சவாலான காரியங்களையும் சாதுர்யமாக முடித்து வெற்றி பெறுவீர். தடைகள் நீங்கும். முக்கிய முடிவுகள் எடுப்பீர். வியாபாரத்தில் போட்டி குறையும். லாபம் அதிகரிக்கும். அலுவலகத்தில் மதிப்பு உயரும்.
கடகம்: கடனாக வாங்கியிருந்த பணத்தை தந்து முடிப்பீர்கள். குடும்பத்தில் குதூகலமான சூழ்நிலை உருவாகும். உத்தியோகத்தில் மேலதிகாரியின் ஆதரவு உண்டு. வியாபாரத்தில் புதிய பங்குதாரர்கள் கிடைப்பர்.
சிம்மம்: சகோதரியின் விசேஷத்துக்காக உழைப்பீர்கள். அணுகுமுறையை மாற்றி பணிகளை முடிப்பீர்கள். அலுவலகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும். வியாபாரரீதியாக முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள்.
கன்னி: பிரபலங்களை சந்திப்பதால் மனநிறைவு கிட்டும். தம்பதிக்குள் நெருக்கம் கூடும். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர். அலுவலகத்தில் திருப்திகரமான சூழ்நிலை உருவாகும். மேலதிகாரிகள் பாராட்டுவர்.
துலாம்: பணப்புழக்கம் கூடும். நிறைவடையாமல் இருந்த பணிகளை முடிப்பீர். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பர். அலுவலகத்தில் நிம்மதி உண்டு. சக ஊழியர்களை அனுசரித்து நடந்து கொள்வீர்.
விருச்சிகம்: தம்பதிக்குள் மனம்விட்டுப் பேசி, பிரச்சினைகளை சமாளிப்பீர். உடல்சோர்வு, அலைச்சல் வந்து போகும். வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டு. அலுவலகத்தில் விவாதங்களை தவிர்ப்பது நல்லது.
தனுசு: குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். பணவரவு அதிகரிக்கும். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வியாபாரரீதியாக சிலரை சந்திப்பீர். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு உண்டு.
மகரம்: முகத்தில் தெளிவு பிறக்கும். மனைவிவழியில் நல்ல செய்தி உண்டு. வாகனத்தை சரி செய்வீர். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் தலைமையின் முழு நம்பிக்கையை பெறுவீர்கள்.
கும்பம்: வருமென நினைத்திருந்த பணம் வந்துசேரும். தாய், மனைவியின் விருப்பங்களை நிறைவேற்றுவீர். பிள்ளைகளால் நிம்மதியுண்டு. அலுவலகத்தில் புதிய பதவிக்கு பரிந்துரைக்கப்படுவீர். வியாபாரம் சிறக்கும்.
மீனம்: பிள்ளைகளின் பெருமைகளை மற்றவர்களிடம் சொல்லி மகிழ்வீர். உடன்பிறந்தோரின் ஒத்துழைப்பு உண்டு. கனிவாகப் பேசி வியாபாரத்தில் காரியங்களை சாதிப்பீர். அலுவலகத்தில் அமைதி காப்பது நல்லது.
|
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT