Published : 26 Sep 2025 06:27 AM
Last Updated : 26 Sep 2025 06:27 AM
மேஷம்: மகளின் திருமணம் தொடர்பாக அலைச்சல் இருக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் கோபத்தை காட்டாதீர். வியாபாரத்தில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. அலுவலகத்தில் விவாதங்களை தவிர்க்கவும்.
ரிஷபம்: எதிர்பார்த்த பணம் கைக்கு வருவதால் மனநிம்மதி கிட்டும். மனைவிவழியில் மதிப்பு உயரும். தாயாரின் விருப்பத்தை நிறைவேற்றுவீர். ஆன்மிகத்தில் நாட்டம் கூடும். வியாபாரம், உத்தியோகம் சிறக்கும்.
மிதுனம்: குடும்பத்தில் நிலவிய விவாதங்கள் மறையும். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். நல்லவர்களின் நட்பு கிடைக்கும். அலுவலகத்தில் உயரதிகாரி நேசக்கரம் நீட்டுவார். வியாபாரத்தை விரிவுபடுத்த முயற்சிப்பீர்கள்.
கடகம்: உடன் பிறந்தவர்கள் உதவிகரமாக இருப்பர். பழைய சொத்துச் சிக்கல் தீரும். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். அலுவலக மேலதிகாரிக்கு நெருக்கமாவீர். வியாபாரம் சூடு பிடித்து லாபம் தரும்.
சிம்மம்: கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். வெளிவட்டாரத்தில் மகிழ்ச்சி தங்கும். தள்ளிப்போன விஷயங்கள் உடனே முடியும். தொழிலில் போட்டி குறையும். உத்தியோகம் சிறக்கும்.
கன்னி: உடன்பிறந்தவர்களின் வளர்ச்சிக்கு உதவிகரமாக இருப்பீர். பழைய பிரச்சினைகளை தீர்ப்பீர். சொந்த ஊர் விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரம் சூடு பிடிக்கும். அலுவலகரீதியாக பயணம் செல்வீர்கள்.
துலாம்: புது நண்பர்கள் அறிமுகமாவர். தம்பதிக்குள் நெருக்கம் கூடும். வாகனப் பழுது நீங்கும். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. வியாபாரம் லாபம் தரும்.
விருச்சிகம்: தம்பதிக்குள் விட்டுக் கொடுத்து போகவும். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து நடந்து கொள்ளவும். உத்தியோகத்தில் பணிச்சுமை கூடும். வியாபாரத்தில் பாக்கிகளை வசூலிக்க போராட வேண்டியிருக்கும்.
தனுசு: வீட்டில் கல்யாண முயற்சிகள் பலிதமாகும். பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். பூர்வீக வீட்டை விரிவுப்படுத்துவீர். வியாபாரம் திருப்தி தரும். அலுவலகத்தில் மதிப்புயரும்.
மகரம்: செலவுகளை குறைத்துக் கொண்டு சேமிப்பீர். தாய்வழி உறவினர்கள் ஆதரவாக இருப்பர். பழைய வழக்கு சாதகமாகும். வியாபார போட்டிகளை தகர்ப்பீர். அலுவலகரீதியாக முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள்.
கும்பம்: சொந்த ஊரில் மதிக்கப்படுவீர். கவுரவப் பதவி தேடி வரும். மூத்த சகோதர, சகோதரிகளுடன் இருந்த மோதல் நீங்கும். ஷேர், கமிஷன் வகைகளால் பணம் வரும். வியாபாரம், உத்தியோகத்தில் ஏற்றம் காண்பீர்.
மீனம்: மனதுக்கு இதமான செய்தி வரும். உடல்சோர்வு, வயிற்றுவலி சீராகும். வியாபாரத்தில் பாக்கி வசூலாகும். பணியாட்கள் ஆதரவாக இருப்பார்கள். அலுவலகத்தில் யாரைப் பற்றியும் தலைமையிடத்தில் புகார் கூறாதீர்கள்.
|
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT