Published : 24 Sep 2025 06:27 AM
Last Updated : 24 Sep 2025 06:27 AM
மேஷம்: மன வலிமையுடன் போராடி சாதிப்பீர். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர். வெளி யூரிலிருந்து நல்ல செய்தி வரும். அலுவலகத்தில் உங்கள் கை ஓங்கும். வியாபாரத்தை விரிவுபடுத்த முயற்சிப்பீர்.
ரிஷபம்: சொன்ன சொல்லை நிறைவேற்றுவீர். பிள்ளை களால் பெருமையுண்டு. தாயாரின் உடல்நிலை சீராகும். உறவினர்கள், நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். வியாபாரம் லாபம் தரும். உத்தியோகம் சிறக்கும்.
மிதுனம்: நேர்கொண்ட பார்வையுடன் சில முடிவுகள் எடுப்பீர். பிரபலங்கள் உதவுவர். பயணங்கள் சிறப்பாக அமையும். அலுவலகத்தில் அமைதி காப்பது நல்லது. வியாபாரத்தில் பணியாட்களிடம் அன்பு காட்டவும்.
கடகம்: பழைய கடனைத் தீர்க்க புது வழி யோசிப்பீர். புது வேலை கிட்டும். தந்தையின் உடல்நலம் சீராகும். நண்பர்கள் தேடி வருவர். தொழிலில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பு தருவர். உத்தியோகத்தில் மேன்மை உண்டு.
சிம்மம்: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளை பொறுப்பாக வளர்க்க எண்ணுவீர். உத்தியோகத்தில் மேலதிகாரி நேசக்கரம் நீட்டுவார். வியாபாரத்தில் ஓரளவு லாபம் பார்க்கலாம்.
கன்னி: குடும்பத்தில் அமைதி திரும்பும். வெளிநாட்டு பயணத்துக்கான விசா கிடைக்கும். வேற்றுமதத்தினர் உதவுவர். வியாபாரத்தில் புதுயுக்திகளை கையாளுவீர். அலுவலகரீதியாக வெளியூர் பயணம் மேற்கொள்வீர்.
துலாம்: மன இறுக்கம், குழப்பங்கள் வந்து போகும். அவசரப்பட்டு எதையும் பேசாமல் இருப்பது நல்லது. வியாபாரத்தில் முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர். அலுவலகத்தில் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்.
விருச்சிகம்: தம்பதிக்குள் இருந்த கருத்துமோதல்கள் மறையும். விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும். நவீன சாதனங்கள் வாங்குவீர். வியாபாரத்தில் சரக்குகள் விற்றுத் தீரும். அலுவலகத்தில் விவாதங்கள் வேண்டாம்.
தனுசு: குடும்பத்தாரின் விருப்பங்களை கேட்டறிந்து நிறைவேற்றுவீர். பிள்ளைகளின் உடல்நிலை சீராகும். தாய்வழி உறவினர்களிடம் இருந்த மனக்கசப்பு நீங்கும். வியாபாரம், உத்தியோகத்தில் முன்னேற்றம் காண்பீர்.
மகரம்: ஆன்மிகத்தில் நாட்டம் கூடும். மாறுபட்ட அணுகுமுறையால் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர். அலுவலகத்தில் அதிகாரிகள் முக்கிய அறிவுரை தருவர். வியாபாரத்தில் புதிய பங்குதாரர்கள் கிடைப்பார்கள்.
கும்பம்: தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர். உறவினர், நண்பர்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் பங்குதாரர்களுடன் இருந்த குழப்பங்கள் நீங்கும். அலுவலகத்தில் பணிச்சுமை ஓரளவு குறையும்.
மீனம்: வெளிவட்டாரத்தில் விவாதங்கள் வேண்டாம். குடும்ப உறுப்பினர்களிடம் விட்டுக் கொடுத்து போவது நல்லது. வியாபாரத்தில் முடிவெடுப்பதில் நிதானம் தேவை. அலுவலகத்தில் யாரை பற்றியும் குறை கூறாதீர்.
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT