Published : 22 Sep 2025 06:20 AM
Last Updated : 22 Sep 2025 06:20 AM
மேஷம்: விலை உயர்ந்த பொருட்கள், மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் போட்டி விலகும். உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள்.
ரிஷபம்: மனதில் இருந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். பெற்றோர் உடல்நலம் சீராகும். பழைய கடனை தீர்க்க உதவி கிடைக்கும். வியாபாரத்தில் முக்கிய மாற்றங்கள் செய்து லாபம் ஈட்டுவீர்கள்.
மிதுனம்: எடுத்த வேலையை விரைந்து முடிப்பீர்கள். சுற்றி இருப்பவர்களில் நல்லவர்களை கண்டறிவீர்கள். பிள்ளைகளால் பெருமை சேரும். அலுவலகத்தில் சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள்.
கடகம்: சுறுசுறுப்புடன் செயல்பட்டு முக்கிய வேலைகளை முடிப்பீர்கள். சொந்த ஊரில் இருந்து நல்ல செய்திகள் வரும். வியாபாரத்தில் வராது என்று கருதிய பாக்கிகள் வசூலாகும். பண வரவு உண்டு.
சிம்மம்: எதிர்பார்த்தபடி சில வேலைகளை முடிப்பீர்கள். கணவன் - மனைவிக்குள் விட்டுக்கொடுத்து செல்வீர்கள். பழுதான வாகனத்தை மாற்றுவீர்கள். வியாபார நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள்.
கன்னி: உறவினர்கள், நண்பர்களால் திடீர் பயணம், வீண் செலவுகள் வரக்கூடும். குடும்பத்தில் அமைதி தங்கும். வியாபாரத்தில் ஓரளவு லாபம் உண்டு. வாகனப் பயணத்தில் கவனம் தேவை.
துலாம்: குடும்பத்தினருடன் கலந்துபேசி பழைய பிரச்சினைகளுக்கு சுமுக தீர்வு காண்பீர்கள். தொழில் ரீதியாக முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். ஆன்மிகத்தில் நாட்டம் உண்டாகும்.
விருச்சிகம்: எதிர்பாராத பயணத்தால் ஆதாயம் உண்டு. முக்கிய நபர்களின் நட்பால் அனுகூலம் உண்டாகும். அரசு, வங்கி காரியங்கள் விரைந்து முடியும். கணவன் - மனைவிக்குள் இருந்த பிரச்சினை நீங்கும்.
தனுசு: மனக் குழப்பம் நீங்கி தெளிவான முடிவு எடுப்பீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். வெளி வட்டாரத்தில் மதிப்பு, மரியாதை கூடும். பண வரவால் நிம்மதி உண்டு.
மகரம்: நண்பர்கள் தக்க சமயத்தில் உதவுவார்கள். ஆடை, ஆபரணம், நகைகள் வாங்குவீர்கள். வீட்டை விரிவுபடுத்துவீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் போட்டி குறையும்.
கும்பம்: தட்டுத் தடுமாறி சில வேலைகளை முடிப்பீர்கள். குடும்பத்தில் விட்டுக்கொடுத்து செல்வது அவசியம். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் போராடி வசூலாகும். காரியத்தில் நிதானம் தேவை.
மீனம்: உங்களது மாறுபட்ட அணுகுமுறையால் பழைய பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காண்பீர்கள். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். பெரிய பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும்.
| ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT