Published : 19 Sep 2025 06:13 AM
Last Updated : 19 Sep 2025 06:13 AM
மேஷம்: உடன்பிறந்தவர்களால் ஆதாயமுண்டு. முரண்டு பிடித்த பிள்ளைகள் சொல்பேச்சு கேட்பர். தாயாரின் உடல்நலம் நிம்மதி தரும். வாகனச் செலவு குறையும். வியாபாரம், உத்தியோகத்தில் முன்னேற்றம் காண்பீர்.
ரிஷபம்: தம்பதிக்குள் விவாதங்கள் விலகும். வெளியூர் பயணங்கள் திருப்தி தரும். வெளிவட்டாரத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கூடும். பழைய கடனை தீர்க்க முயற்சி செய்வீர். வியாபாரம், உத்தியோகத்தில் ஏற்றமுண்டு.
மிதுனம்: வெளிவட்டாரத் தொடர்பால் சில பணிகளை முடிப்பீர். குடும்பத்தாருடன் மனம் விட்டுப் பேசுவீர். ஆன்மிகத்தில் ஈடுபாடு கூடும். அலுவலகத்தில் மதிப்பு உயரும். வியாபாரத்தை பெரியளவில் விரிவுபடுத்துவீர்.
கடகம்: முடியாமல் போன சில காரியங்களை முடிப்பீர். தம்பதிக்குள் மகிழ்ச்சி தங்கும். அக்கம் - பக்கத்தினரின் ஆதரவு கிட்டும். வியாபாரத்தில் ஓரளவு லாபமுண்டு. அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் தென்படும்.
சிம்மம்: உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். உறவினர்களின் அன்புத் தொல்லை உண்டு. உங்களை சுற்றியிருப்பவர்களில் நல்லவர் யார் என்பதை உணர்வீர். வியாபாரத்தில் நிதானம் தேவை. உத்தியோகம் சிறக்கும்.
கன்னி: மன நிறைவுடன் காணப்படுவீர். குடும்பத்தில் அனுசரித்துப் போவீர். பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடு விலகும். கடனை பைசல் செய்வீர். வியாபாரத்தில் லாபமுண்டு. அலுவலத்தில் அமைதி காக்கவும்.
துலாம்: வெளியூர் பயணம் மனநிம்மதி தரும். பிரபலங்களால் ஆதாயமடைவீர். விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும். அலுவலகத்தில் மேலதிகாரி ஆதரவாக இருப்பார். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்.
விருச்சிகம்: சகோதர வகையில் எதிர்பார்த்த உதவிகள் கிட்டும். பேச்சில் கம்பீரம் பிறக்கும். தாயாரின் மருத்துவ செலவுகள் குறையும். வியாபாரத்தில் சரக்குகள் விற்றுத் தீரும். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்ப்பீர்கள்.
தனுசு: மறைமுக போட்டிகளுக்கு பதிலடி தருவீர்கள். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். அலுவலகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் நல்ல லாபம் உண்டு. புதிய பங்குதாரர்கள் கிடைப்பார்கள்.
மகரம்: மற்றவர்களுக்கு நியாயம் பேசப் போய் பெயரை கெடுத்துக் கொள்ளாதீர். பண விஷயத்தில் கறாராக இருக்கவும். வியாபாரம் லாபம் தரும். அலுவலகத்தில் தானுண்டு தன் வேலை உண்டு என்று இருப்பது நல்லது.
கும்பம்: குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். சுறுசுறுப்புடன் செயல்படுவதால் அனைத்தும் வெற்றி அடையும். பிள்ளைகளின் உடல்நிலை சீராகும். வியாபாரம் சிறக்கும். அலுவலகத்தில் புதிய பதவி கிட்டும்.
மீனம்: தள்ளிப் போய் கொண்டிருந்த சுபகாரியம் கூடி வரும். பிள்ளைகளின் எண்ணங்களை பூர்த்தி செய்வீர். சகோதர, சகோதரிகளால் நன்மையுண்டு. வியாபாரத்தை விரிவுபடுத்துவீர். அலுவலகத்தில் அமைதி காக்கவும்.
| ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT