Published : 18 Sep 2025 07:09 AM
Last Updated : 18 Sep 2025 07:09 AM
மேஷம்: வெளிவட்டாரத்தில் மதிப்பு, மரியாதை உயரும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி ஏற்பாடாகும். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிட்டும். அலுவலகத்தில் விரும்பிய இடமாற்றம் உண்டு. வியாபாரம் ஓரளவு லாபம் தரும்.
ரிஷபம்: பொது காரியங்களில் ஈடுபடுவீர். குழப்பம் நீங்கி முக மலர்ச்சியுடன் காணப்படுவீர். பிள்ளைகளால் இருந்த மன உளைச்சல் நீங்கும். வியாபாரத்தில் பங்கு தாரர்கள் ஒத்துழைப்பு தருவர். உத்தியோகம் சிறக்கும்.
மிதுனம்: இழுபறியாக இருந்த பணி நிறைவடையும். தந்தையாருடன் இருந்து வந்த பனிப்போர் விலகும். வியாபாரத்தில் பழைய சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். பாக்கி வசூலாகும். அலுவலகத்தில் அமைதி காக்கவும்.
கடகம்: பிள்ளைகள் படிப்பு தொடர்பாக அலைச்சல், டென்ஷன் வரக் கூடும். குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போகவும். வியாபாரத்தில் புது முடிவு எடுக்காதீர்கள். அலுவலகரீதியான பயணங்களால் ஆதாயம் உண்டு.
சிம்மம்: எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். மகளுக்கு நல்ல வரன் அமையும். தாய்வழி உறவினர்கள் உதவி நாடி வருவர். அலுவலகத்தில் நிம்மதி உண்டு. வியாபாரத்தை பெரிய அளவில் விரிவுபடுத்துவீர்கள்.
கன்னி: குடும்பத்தினரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர். புது வேலை கிடைக்கும். பிள்ளைகளின் பாசமழையில் நனைவீர்கள். அலுவலகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர். வியாபாரத்தில் ஏற்றம் காண்பீர்கள்.
துலாம்: திடீரென்று அறிமுகமாகும் சிலரால் ஆதாயம் உண்டு. பழைய நண்பர்கள் தேடி வருவர். குடும்பத்தில் நிம்மதி தங்கும். இழுபறியாக இருந்த அரசு வேலைகள் முடியும். வியாபாரம், உத்தியோகத்தில் மேன்மையுண்டு.
விருச்சிகம்: வெளிப்படையான பேச்சால் காரியங்களை முடித்துக் காட்டுவீர். தம்பதிக்குள் நெருக்கம் கூடும். உத்தியோகத்தில் மேலதிகாரி பாராட்டுவார். எதிலும் மகிழ்ச்சி கிட்டும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள்.
தனுசு: தம்பதிக்குள் மனக்கசப்பு வரக்கூடும். அக்கம் பக்கத்தினருடன் அளவாகப் பேசிப் பழகுவது நல்லது. வியாபாரத்தில் பழைய பாக்கிகளை மிகவும் போராடி வசூலிப்பீர். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும்.
மகரம்: தள்ளிப் போய் கொண்டிருந்த சுபநிகழ்ச்சிக்கு நாள் குறிப்பீர். பணவரவு திருப்தி தரும். முன்கோபத்தை தவிர்ப்பீர். வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். அலுவலகரீதியாக வெளியூர் பயணங்கள் மேற்கொள்வீர்.
கும்பம்: தம்பதிக்குள் இருந்த பனிப்போர் மாறும். தொல்லை தந்த வாகனத்தை மாற்றுவீர். வியாபாரத்தில் சரக்கு விற்றுத் தீரும். பணியாட்கள் அன்பாக இருப்பர். அலுவலகத்தில் புதிய பதவிக்கு பரிந்துரைக்கப்படுவீர்.
மீனம்: விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். ஈகோ பிரச்சினையால் பிரிந்த தம்பதி ஒன்று சேர்வர். அலுவலகத்தில் உங்கள் மதிப்பு, மரியாதை கூடும். வியாபார விஷயமாக முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்.
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT