Published : 16 Sep 2025 06:13 AM
Last Updated : 16 Sep 2025 06:13 AM
மேஷம்: உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர். வியாபார நுணுக்கங்களை கற்று கொள்வீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். வெளியூர் பயணத்தால் ஆதாயம் உண்டு.
ரிஷபம்: குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். தம்பதிக்குள் இருந்த பனிப்போர் விலகும். மகனின் வருங்காலத்துக்கான முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வியாபாரம், உத்தியோகத்தில் முன்னேற்றம் காண்பீர்.
மிதுனம்: குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போகவும். பிள்ளைகளால் செலவு ஏற்படும். வியாபாரத்தில் பழைய பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். அலுவலகரீதியாக முக்கிய பிரமுகர்கள், பிரபலங்களை சந்திப்பீர்கள்.
கடகம்: பணவரவு உண்டு. உங்களுடன் உறவாடிக் கொண்டே உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்களை கண்டறிந்து ஒதுக்குவீர்கள். வியாபாரரீதியாக வெளியூர் பயணங்கள் மேற்கொள்வீர். உத்தியோகம் சிறக்கும்.
சிம்மம்: பழைய நல்ல சம்பவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் இருக்கும். தொழிலில் பழைய பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் பழைய பிரச்சினைகள் தீர்வுக்கு வரும்.
கன்னி: பணிச்சுமை, திடீர் பயணங்கள் வந்து போகும். வறட்டு கவுரவத்துக்காக சேமிப்புகளை கரைக்காதீர். கடன் பிரச்சினை அதிகமாகும். வியாபாரத்தில் லாபம் உண்டு. அலுவலகத்தில் அமைதி காப்பது நல்லது.
துலாம்: குலதெய்வ வழிபாடு மனநிறைவைத் தரும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர். புதியவர்கள் நண்பர்களாவர். அலுவலகத்தில் முக்கிய பொறுப்புகள் தேடி வரும். வியாபாரத்தை விரிவுபடுத்த முயற்சிப்பீர்.
விருச்சிகம்: உறவினர்களின் அன்புத் தொல்லை உண்டு. சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும், அத்தியாவசிய செலவுகள் கூடும். வாகனத்தில் இருந்த பழுது நீங்கும். வியாபாரம் சிறக்கும்.
தனுசு: குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போகவும். பிள்ளைகளால் அலைச்சல் இருக்கும். வாகனத்தில் நிதானம் தேவை. வியாபாரத்தை விரிவுபடுத்துவதில் அவசரம் வேண்டாம். அலுவலகத்தில் அமைதி காப்பீர்.
மகரம்: குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர். பிள்ளைகள் ஒத்துழைப்பு தருவர். நண்பர்கள் உங்களைப் புரிந்து கொள்வர். வியாபாரத்தில் பாக்கி வசூலாகும். உத்தியோகம் சிறக்கும்.
கும்பம்: குடும்பத்தில் நிம்மதி கிட்டும். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர். நீண்ட நாட்களாக உங்களை பார்க்க நினைத்த ஒருவர், தேடி வருவார். வியாபாரம் சிறக்கும். அலுவலகத்தில் மேலதிகாரி பாராட்டுவார்.
மீனம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். தங்கம், வெள்ளி ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் எச்சரிக்கை தேவை. அலுவலகத்தில் உங்களை நம்பி சில பொறுப்புகள் ஒப்படைக்கப்படும்.
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT