Published : 15 Sep 2025 06:35 AM
Last Updated : 15 Sep 2025 06:35 AM
மேஷம்: புதிய திட்டங்கள் நிறைவேறும். பிள்ளைகள் நம்பிக்கை தருவார்கள். நட்பால் ஆதாயம் உண்டு. வீண் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். அலுவலகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.
ரிஷபம்: புதிய யோசனைகளை தந்து, சுற்றி இருப்பவர்களை அசத்துவீர்கள். பாதியில் நின்ற வேலைகள் முடியும். வீட்டில் அழகான பொருட்கள் சேரும். வியாபாரத்தில் பழைய பாக்கி வசூலாகும்.
மிதுனம்: குடும்பத்தில் சிறு சிறு கருத்து மோதல் வந்து போகும். சில வேலைகளை முடிக்க மிகவும் போராடுவீர்கள். வியாபாரத்தில் நிதானம் தேவை. நாடி வந்தவர்களுக்கு இயன்ற உதவியை செய்வீர்கள்.
கடகம்: முகத்தில் தெளிவு பிறக்கும். புதியவர்களின் நட்பு கிடைக்கும். குடும்பத்துடன் புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். பெற்றோர் உடல்நலத்தில் முன்னேற்றம் காணப்படும்.
சிம்மம்: பிரபலங்களின் வீட்டு விசேஷங்களில் பங்கேற்பீர்கள். புதிய ஆடை, ஆபரணங்கள் சேரும். தாய்வழி உறவினர்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும்.
கன்னி: திட்டமிட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். மனப் போராட்டம் விலகும். குடும்பத்தில் அமைதி நிலவும். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். உத்தியோகத்தில் மகிழ்ச்சி பொங்கும்.
துலாம்: வெளியூரில் இருந்து நல்ல செய்தி வரும். குடும்பத்தினரின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றுவீர்கள். அடிக்கடி வாகனத்துக்காக செலவு செய்யாமல், வாகனத்தை மாற்றுவீர்கள்.
விருச்சிகம்: எடுத்த வேலையை முடிக்க போராட வேண்டி இருக்கும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் விட்டுக்கொடுத்து செல்வது அவசியம். வியாபாரத்தில் புதிய குழப்பங்கள் வந்து நீங்கும்.
தனுசு: பால்ய நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். பிள்ளைகள் மனம்விட்டுப் பேசுவார்கள். பண விஷயத்தில் கறாராக இருங்கள். அலுவலகத்தில் சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். பொருட்கள் சேரும்.
மகரம்: நெடுநாளாக அடைக்க முடியாமல் இருந்த கடனை அடைக்கும் அளவுக்கு பண வரவு இருக்கும். மனைவியின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். வீட்டில் சுபநிகழ்ச்சிகள் ஏற்பாடாகும்.
கும்பம்: நீண்ட நாள் கனவுகள் நனவாகும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர்களால் ஆதாயமும் உண்டாகும். விலை உயர்ந்த மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். பேச்சில் பொறுமை தேவை.
மீனம்: உதாசீனம் செய்த உற்றார், உறவினர்கள் உங்கள் வீடு தேடி வருவார்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். குலதெய்வ பிரார்த்தனைகளை நல்லபடியாக நிறைவேற்றுவீர்கள்.
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT