Published : 13 Sep 2025 06:42 AM
Last Updated : 13 Sep 2025 06:42 AM

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 13 செப்டம்பர் 2025

மேஷம்: புது சிந்தனையால் மனக் குழப்பம் விலகும். சேமிக்கும் அளவுக்கு பணம் வரும். குடும்பத்தில் நிம்மதி உண்டு. பூர்வீக சொத்து பிரச்சினையில் நல்ல தீர்வு கிடைக்கும். வியாபாரம், உத்தியோகம் சிறக்கும்.

ரிஷபம்: குடும்பத்தில் விட்டுக் கொடுத்துப் போகவும். பிள்ளைகளால் வீண் செலவு இருக்கும். வியாபாரத்தில் போட்டிகள் உண்டு. புதிய பங்குதாரர்கள் ஆதரவு தருவர். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் தென்படும்.

மிதுனம்: வீட்டில் சுபநிகழ்ச்சி ஏற்பாடாகும். திடீர் யோகம் உண்டாகும். உறவினர்கள் உங்களைப் பற்றி பெருமையாக பேசுவர். வியாபாரத்தில் பழைய பாக்கி வசூலாகும். அலுவலகத்தில் அமைதி காப்பது நல்லது.

கடகம்: தோற்றப் பொலிவு கூடும். தம்பதிக்குள் நெருக்கமுண்டு. வியாபாரத்தில் முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைக்கும். அலுவலகத்தில் உயரதிகாரிகள் உங்களுக்கு முன்னுரிமை தருவர். பொறுப்புகள் கூடும்.

சிம்மம்: பாதியில் நின்ற வேலைகள் முடிவடையும். வர வேண்டிய பணம் வரும். உறவினர்கள் ஒத்துழைப்பர். அலுவலகத்தில் உயரதிகாரிகள் முக்கிய விஷயங்களை பகிரும் அளவுக்கு நெருக்கமாவீர். வியாபாரம் சிறக்கும்.

கன்னி: வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். சிலர் உங்கள் உதவியை நாடுவர். முத்த சகோதரர்கள் ஆதரவு தருவர். கடையை மக்கள் அதிகம் கூடும் இடத்துக்கு மாற்றுவீர். அலுவலகரீதியாக பயணம் மேற்கொள்வீர்.

துலாம்: வீண் அலைச்சல், காரியத் தடைகள் வரக் கூடும். வெளிவட்டாரத்தில் நிதானம் தேவை. வியாபாரத்தில் ஓரளவு லாபம் இருக்கும். அலுவலகத்தில் யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். பணிச்சுமை கூடும்.

விருச்சிகம்: தாயாரின் மருத்துவச் செலவு குறையும். உடன்பிறந்தோர் உதவிகரமாக இருப்பார்கள். யோகா, தியானத்தில் மனம் செல்லும். அலுவலகத்தில் பிறர் விஷயத்தில் தலையிடாதீர். வியாபாரம் சூடு பிடிக்கும்.

தனுசு: எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிட்டும். தெளிவான முடிவுகளால் குழப்பம் நீங்கும். ஆன்மிகத்தில் ஈடுபாடு கூடும். வியாபாரம் சிறக்கும். அலுவலகத்தில் இழுபறியாக இருந்த பணிகளை முடிப்பீர்.

மகரம்: குடும்பத்தினரின் எண்ணங்களைக் கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். தந்தைவழியில் நிம்மதியுண்டு. வியாபாரம், உத்தியோகத்தில் முன்னேற்றம் காண்பீர்.

கும்பம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். வாகனத்தை மாற்றுவீர்கள். நெடுநாட்களுக்குப் பிறகு சில நண்பர்களை சந்திப்பீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் நிம்மதி கிட்டும்.

மீனம்: பழைய பொன், பொருளை மாற்றிவிட்டு புதியன வாங்குவீர்கள். மனைவியின் சகோதரர்களால் ஆதாயமுண்டு. வியாபாரத்தில் வராது என்றிருந்த பணம் வரும். சரக்குகள் விற்றுத் தீரும். உத்தியோகம் சிறக்கும்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x