Published : 12 Sep 2025 06:17 AM
Last Updated : 12 Sep 2025 06:17 AM

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 12 செப்டம்பர் 2025

மேஷம்: திட்டமிட்ட பணியை முடிக்க முடியாமல் திணறுவீர். அலைச்சல் இருக்கும். பிள்ளைகளிடம் கனிவாக பேசவும். வியாபாரம் சிறக்கும். அலுவலக ரீதியாக முக்கிய பிரமுகர்களை சந்திக்கும் வாய்ப்புண்டு.

ரிஷபம்: தள்ளிப் போய்க் கொண்டிருந்த சுபநிகழ்ச்சிக்கு தேதி குறிப்பீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் தேடிய ஆவணம் கிட்டும்.

மிதுனம்: குடும்பத்தில் எதிலும் உங்கள் கை ஓங்கும். முன்கோபம் விலகும். மனைவியுடன் இருந்த மோதல் நீங்கும். வியாபாரத்தில் புதிய யுக்திகளை கையாள்வீர். அலுவலகத்தில் உங்களின் ஆளுமைத் திறன் கூடும்.

கடகம்: அடிமனதில் இருந்த தாழ்வு மனப்பான்மை நீங்கும். புதிய நண்பர் அறிமுகத்தால் உற்சாகமடைவீர். வாகனத்தால் வீண் செலவு இருக்காது. வியாபாரத்தில் போட்டிகள் குறையும். அலுவலகத்தில் அமைதி காப்பீர்.

சிம்மம்: பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். வியாபார நெளிவு சுளிவுகளை புரிந்து கொள்வீர். வேற்றுமதத்தவர் உதவுவர். அலுவலகத்தில் யாரையும் பகைத்து கொள்ளாதீர்கள். பொறுப்புகள் தேடி வரும்.

கன்னி: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். பொது காரியங்களில் ஈடுபடுவீர்கள். அலுவலகரீதியாக அரசாங்க அதிகாரிகளை சந்திப்பீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும்.

துலாம்: எதிலும் நிதானமாக செயல்படுவது நல்லது. குடும்பத்தில் மூத்தோரின் அறிவுரையை ஏற்கவும். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. வியாபாரம் லாபம் தரும். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்க்கவும்.

விருச்சிகம்: குடும்ப உறுப்பினர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர். கையில் பணம் புரளும். விஐபிகளை சந்திப்பதால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். அலுவலகப் பிரச்சினை விலகும்.

தனுசு: வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர். நண்பர்கள் உதவி கேட்டுவருவர். தம்பதிக்குள் நெருக்கம் கூடும். பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் உண்டாகும். வியாபாரம், உத்தியோகத்தில் முன்னேற்றம் காண்பீர்.

மகரம்: தடைபட்டிருந்த காரியங்கள் நல்ல விதத்தில் முடிவடையும். பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் நல்ல தீர்வு காண்பீர். வியாபாரம் சூடு பிடிக்கும். அலுவலகத்தில் குழப்பம் நீங்கும்.

கும்பம்: விலையுயர்ந்த கலைப் பொருட்கள் வாங்குவீர். வியாபாரத்தில் அதிரடியாக செயல்பட்டு லாபமீட்டுவீர். பங்குதாரர்களின் ஆலோசனையை கேட்டு நடக்கவும். அலுவலகத்தில் புதிய பதவிக்கு பரிந்துரைக்கப்படுவீர்.

மீனம்: எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். வீட்டை விரிவுபடுத்தி கட்டுவீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சி தங்கும். அண்டை அயலாருடன் இருந்து வந்த மோதல் விலகும். வியாபாரம், உத்தியோகம் சிறக்கும்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x