Published : 04 Sep 2025 06:33 AM 
 Last Updated : 04 Sep 2025 06:33 AM
மேஷம்: குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். மனக்குழப்பம் நீங்கும். பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் ஏற்படும். அலுவலகத்தில் சக ஊழியர்கள் ஆதரவு தருவர். வியாபாரத்தில் இருந்து வந்த போட்டி குறையும்.
ரிஷபம்: சொந்தம் பந்தங்களிடையே மதிப்பு, மரியாதை கூடும். தந்தைவழி சொத்துகள் கைக்கு வரக்கூடும். மூத்த சகோதர சகோதரிகள் உதவி செய்வர். வாகனப் பழுது நீங்கும். வியாபாரம், உத்தியோகத்தில் ஏற்றம் உண்டு.
மிதுனம்: செலவுகளைக் குறைத்து சிக்கனமாக இருக்கப்பாருங்கள். குடும்பத்தில் வீண் விவாதங்கள் வேண்டாம். உறவினர்களின் அன்புத் தொல்லை உண்டு. வியாபாரம் சூடு பிடிக்கும். அலுவலகத்தில் மரியாதை அதிகரிக்கும்.
கடகம்: சொன்ன சொல்லைக் காப்பாற்ற பரபரப்புடன் செயல்படுவீர். மனதுக்குப் பிடித்தவர்களுக்காக அதிகம் செலவு செய்வீர். தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வியாபாரம், உத்தியோகம் சிறக்கும்.
சிம்மம்: மனதுக்கு இதமான செய்திகள் வரும். குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். தாய்வழி உறவினர்களால் ஆதாயமுண்டு. அலுவலகத்தில் பணிச்சுமை குறையும். வியாபாரத்தை பெரிய அளவில் விரிவுபடுத்துவீர்கள்.
கன்னி: குடும்பத்தாருடன் கலந்து பேசி முக்கிய முடிவு எடுப்பீர். கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். சகோதரர்களால் பயனடைவீர்கள். வியாபாரம் லாபம் தரும். அலுவலகத்தில் தேடிய ஆவணம் தென்படும்.
துலாம்: தொலை நோக்குச் சிந்தனையுடன் செயல்பட்டு சில பிரச்சினைகளை முடிப்பீர்கள். தம்பதிக்குள் இருந்து வந்த சந்தேகம் விலகும். பிள்ளைகள் அன்பாக நடந்து கொள்வர். வியாபாரம், உத்தியோகத்தில் ஏற்றம் உண்டு.
விருச்சிகம்: சந்தர்ப்ப சூழல் அறிந்து செயல்படுவீர். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி ஏற்பாடாகும். பிரபலங்களின் அறிமுகம் கிட்டும். வியாபாரத்தை விரிவாக்கம் செய்ய வங்கிக்கடன் கிடைக்கும். உத்தியோகம் சிறக்கும்.
தனுசு: அடுக்கடுக்காக இருந்து வந்த செலவுகள் இனி குறையும். சவாலான காரியங்களையும் எடுத்து முடிப்பீர். வியாபாரரீதியாக பிரபலங்களின் உதவியை நாடுவீர்கள். அலுவலகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் உண்டு.
மகரம்: பிள்ளைகளின் படிப்பு தொடர்பாக அவசர முடிவு வேண்டாம். வீண் செலவுகளை கட்டுப்படுத்தி சேமிக்க முயற்சிக்கவும். உத்தியோகரீதியாக பயணம் மேற்கொள்வீர். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும்.
கும்பம்: புதிய கோணத்தில் சிந்தித்து பழைய சிக்கலை தீர்ப்பீர். தாயாருடன் இருந்து வந்த மோதல்கள் விலகும். பணப் பற்றாக்குறையை சமாளிப்பீர்கள். வியாபாரம் சூடு பிடிக்கும். அலுவலகத்தில் புதிய பதவி கிட்டும்.
மீனம்: விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும். சகோதரர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்து கொள்வர். அதிகார பதவியில் இருப்பவர்கள் உதவுவர். வியாபாரம் லாபம் தரும். அலுவலகத்தில் அமைதி காப்பது நல்லது.
| ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. | 
Sign up to receive our newsletter in your inbox every day!
								
WRITE A COMMENT