Published : 02 Sep 2025 06:33 AM 
 Last Updated : 02 Sep 2025 06:33 AM
மேஷம்: தள்ளிப் போய்க் கொண்டிருந்த சுபநிகழ்ச்சிகள் கை கூடி வரும். தம்பதிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளுடன் நேரத்தை செலவழிப்பீர்கள். அலுவலக ரீதியான பயணம் திருப்தி தரும். வியாபாரம் சிறக்கும்.
ரிஷபம்: பிள்ளைகளின் உடல்நலத்தில் அக்கறை காட்டவும். தம்பதிக்குள் சின்னச் சின்ன கருத்துமோதல் வரக் கூடும். வியாபாரத்தில் ஓரளவு லாபம் பார்க்கலாம். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் தென்படும்.
மிதுனம்: பழைய பிரச்சினைக்கு புது தீர்வு கிடைக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்திகள் வரும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர். உத்தியோகம் சிறக்கும்.
கடகம்: பணவரவு உண்டு. செலவுகளைக் குறைத்து வருங்காலத்துக்காக சேமிக்கத் தொடங்குவீர். வழக்குகள் சாதகமாக முடியும். வியாபாரத்தை பெரிய அளவில் விரிவுபடுத்துவீர். அலுவலகத்தில் அமைதி காக்கவும்.
சிம்மம்: எதிர்பார்த்து காத்திருந்த தொகை வந்து சேரும். குழப்பங்கள் நீங்கி குடும்பத்தில் அமைதி திரும்பும். அலுவலகத்தில் உங்கள் ஆலோசனைகள் ஏற்கப்படும். ஊரின் மையப் பகுதியில் கடையை மாற்றியமைப்பீர்.
கன்னி: பணிகளை உடனே முடிக்க வேண்டுமென நினைப்பீர். கடன் பிரச்சினை அவ்வப்போது மனதை வாட்டும். வியாபாரத்தில் எதையும் திட்டமிட்டு செய்வது நல்லது. அலுவலகரீதியாக பிரபலங்களை சந்திப்பீர்.
துலாம்: புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்பு அமையும். வியாபாரத்தில் நம்பிக்கைக்கு உரியவர்களின் அறிமுகம் கிட்டும். அலுவலகத்தில் பணிகள் விரைந்து முடியும்.
விருச்சிகம்:பிரியமானவர்களின் சந்திப்பால் மகிழ்ச்சி அடைவீர். குடும்பத்தினரிடம் மனம் விட்டுப் பேசுவீர். உடல் உபாதை நீங்கும். வியாபாரத்தில் பழைய பாக்கி வசூலாகும். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்ப்பீர்.
தனுசு: பிள்ளைகளின் படிப்பு தொடர்பாக அலைச்சல், விரயச் செலவுகள் வரக் கூடும். குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போகவும். அலுவலகத்தில் மேலதிகாரிகள் பாராட்டுவர். வியாபாரத்தில் சரக்குகள் விற்றுத் தீரும்.
மகரம்: விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும். தாயார், மனைவியின் உடல்நிலை சீராக அமையும். கூட்டுத்தொழிலில் இருந்த குழப்பங்கள் நீங்கும். லாபம் அதிகரிக்கும். அலுவலகரீதியான பயணம் திருப்தி தரும்.
கும்பம் : எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் கிட்டும். உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிப்பு உயரும். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் வருவர். உத்தியோகம் சிறக்கும்.
மீனம்: குடும்பத்தினருடன் சென்று குலதெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர். வேற்று மொழி, மதத்தினரால் ஆதாயம் உண்டு. உத்தியோகத்தில் முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிட்டும். வியாபாரம் சிறக்கும்.
| ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. | 
Sign up to receive our newsletter in your inbox every day!
								
WRITE A COMMENT