Published : 01 Sep 2025 05:53 AM
Last Updated : 01 Sep 2025 05:53 AM
மேஷம்: இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். பெற்றோர் உடல்நிலை சீராகும். அரசு, வங்கி காரியங்கள் சுமுகமாக முடியும். தொழில், வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள்.
ரிஷபம்: ஜாமீன் தருவது, சாட்சிக் கையெழுத்திடுவது வேண்டாம். பழைய பிரச்சினைகளுக்கு சுமுக தீர்வு காண்பீர்கள். வாகனம் அடிக்கடி தொந்தரவு தரும். ஆன்மிக நாட்டம் கூடும்.
மிதுனம்: எதார்த்தமாக பேசி, தடைபட்ட காரியங்களை முடிப்பீர்கள். குடும்பத்தினர் ஆதரவு பெருகும். பிள்ளைகள் உடல்நலம் சீராகும். வியாபாரத்தில் பணியாளர்கள் ஆதரவாக இருப்பார்கள்.
கடகம்: புதியவர்களின் நட்பும், அதனால் ஆதாயமும் உண்டு. பணவரவு திருப்திகரமாக இருக்கும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். கொடுக்கல் வாங்கலில் சுமுகமான நிலை காணப்படும்.
சிம்மம்: மனதில் இருந்த பயம் நீங்கி தைரியம் பிறக்கும். கணவன்- மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்பனையாகும். அலுவலகத்தில் பொறுப்பு கூடும்.
கன்னி: மனம் விரும்பிய புதிய பாதையில் பயணிப்பீர்கள். பண வரவு உண்டு. கணவன் - மனைவிக்குள் மனம்விட்டு பேசுவீர்கள். உங்கள் ரசனைக்கேற்ப வீடு, வாகனம் அமையும். வியாபாரம் லாபம் தரும்.
துலாம்: வெளி வட்டாரத்தில் புதியவர்களின் நட்பு கிடைக்கும். தள்ளிப்போன வழக்கில் சாதகமான திருப்பம் வரும். அரசு காரியங்கள் விரைந்து முடியும். நண்பர்கள் தக்க சமயத்தில் உதவுவார்கள்.
விருச்சிகம்: அடுத்தவர் விஷயங்களில் தலையிடாதீர்கள். பழைய கசப்பான சம்பவங்கள் பற்றி யாரிடமும் பேச வேண்டாம். வியாபாரத்தில் ஓரளவு லாபம் உண்டு. ஆன்மிகத்தில் நாட்டம் ஏற்படும்.
தனுசு: நம்பிக்கை, உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். பணப் புழக்கம் திருப்திகரமாக இருக்கும். திடீர் பயணத்தால் உடல் சோர்வு, களைப்பு வந்து நீங்கும்.
மகரம்: எதிர்மறை எண்ணம் மறையும். முகத்தில் தெளிவு பிறக்கும். விருந்தினர்கள் வருகையால் வீட்டில் சந்தோஷம் நிலைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள்.
கும்பம்: பண வரவால் பழைய கடனை அடைப்பீர்கள். குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கூடும். பிள்ளைகள் உடல்நிலை சீராகும். புதிய வாகனம், வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குவீர்கள்.
மீனம்: பால்ய நண்பர்கள் உதவுவார்கள். தாய்வழி உறவினர்களால் வீட்டில் மகிழ்ச்சி தங்கும். பண வரவு, பொருள் வரவு உண்டு. அலுவலகத்தில் உயர் அதிகாரிகளிடம் பாராட்டு பெறுவீர்கள்.
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT