Published : 31 Aug 2025 06:41 AM 
 Last Updated : 31 Aug 2025 06:41 AM
மேஷம்: குடும்பத்தாருடன் விட்டுக் கொடுத்து போகவும். அக்கம் பக்கத்தினரின் அன்புத் தொல்லை நீங்கும். அலுவலக ரீதியாக வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள். வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள்.
ரிஷபம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். பிள்ளைகளால் மகிழ்ச்சியுண்டு. பழைய நண்பர் வீட்டு விசேஷங்களில் பங்கேற்று நட்பை புதுப்பிப்பீர். வியாபாரத்தில் பாக்கி வசூலாகும். உத்தியோகம் சிறக்கும்.
மிதுனம்: நீண்ட நாளாக அடைக்க முடியாமல் இருந்த கடனை அடைக்கும் அளவுக்கு பணம் வரும். மனைவியின் விருப்பத்தை நிறைவேற்றுவீர். வியாபாரம் லாபம் தரும். அலுவலகத்தில் விரும்பிய இடமாற்றம் உண்டு.
கடகம்: நீண்டநாள் கனவு நனவாகும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர்களால் ஆதாயமும் உண்டாகும். விலை உயர்ந்த மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் நிம்மதியுண்டு. உத்தியோகம் சிறக்கும்.
சிம்மம்: உற்றார், உறவினர்கள் வீடு தேடி வந்து பேசுவர். குடும்பத்துடன் சென்று குலதெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் தென்படும்.
கன்னி: குடும்பத்தினரின் விருப்பங்களை கேட்டறிந்து நிறைவேற்றுவீர். பணவரவு உண்டு. பிள்ளைகளால் பெருமையடைவீர். அலுவலகத்தில் மதிப்பு, மரியாதை உயரும். வியாபார ரீதியாக பயணங்கள் மேற்கொள்வீர்.
துலாம்: தடைகள் உடைபடும். தம்பதிக்குள் இருந்த பனிப்போர் விலகும். வருங்காலத்துக்கான முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வரவேண்டிய பணம் கைக்கு வரும். வியாபாரம், உத்தியோகத்தில் ஏற்றம் காண்பீர்.
விருச்சிகம்: குடும்பத்தில் விட்டுக் கொடுத்துப்போவது நல்லது. அண்டை, அயலார் சிலரின் செயல்பாடுகளால் கோபம், எரிச்சல் அடையலாம். அலுவலகத்தில் அமைதி காப்பது நல்லது. வியாபாரம் சூடு பிடித்து லாபம் தரும்.
தனுசு: நீண்ட நாட்களாக தடைபட்ட சுபநிகழ்ச்சிகள் கை கூடி வரும். பிள்ளைகள் மனம் விட்டுப் பேசுவர். பண விஷயத்தில் கறாராக இருப்பீர்கள். வியாபாரத்தில் பணியாட்களின் ஆதரவு உண்டு. உத்தியோகம் சிறக்கும்.
மகரம்: உறவினர், நண்பர்களின் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர். புதிய சிந்தனையால் பழைய பிரச்சினைகளை முடிப்பீர். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் விவாதங்கள் வேண்டாம்.
கும்பம்: பழைய நல்ல சம்பவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். தம்பதிக்குள் நெருக்கம் கூடும். வாகன பராமரிப்புச் செலவுகள் இருக்கும். தொழிலில் பழைய பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் மதிப்பு உயரும்.
மீனம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். குடும்பத்தில் நிலவிய குழப்பம் விலகும். சகோதர வகையில் உதவி கிட்டும். கூட்டுத்தொழில் செய்பவர்கள் நல்ல லாபம் பார்க்கலாம். அலுவலகத்தில் யாரையும் குறை கூறாதீர்.
| ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. | 
Sign up to receive our newsletter in your inbox every day!
								
WRITE A COMMENT