Published : 30 Aug 2025 06:33 AM 
 Last Updated : 30 Aug 2025 06:33 AM
மேஷம்: தம்பதிக்குள் சின்னச் சின்ன கருத்துமோதல் வரக் கூடும். பிள்ளைகளின் உடல்நலத்தில் அக்கறை காட்டவும். வியாபாரத்தில் பாக்கிகளை வசூலிப்பீர்கள். அலுவலகத்தில் யாரைப் பற்றியும் குறை கூறாதீர்கள்.
ரிஷபம்: விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தம்பதிக்குள் இருந்த பனிப்போர் மறையும். வியாபாரம் சூடு பிடித்து நல்ல லாபம் பார்க்கலாம். அலுவலகத்தில் உங்களின் மதிப்பு கூடும். மேலதிகாரிகள் பாராட்டுவர்.
மிதுனம்: கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். தம்பதிக்குள் அன்யோன்யம் பிறக்கும். தாயாரின் உடல் உபாதை நீங்கும். உடன்பிறந்தவர்கள் உதவிகரமாக இருப்பர். வியாபாரம், உத்தியோகத்தில் ஏற்றம் காண்பீர்.
கடகம்: கூடுதலான பணவரவால் வீட்டிலுள்ள பழைய பொருட்களை மாற்றுவீர். அலுவலகத்தில் உயரதிகாரி பாராட்டும்விதமாக நடப்பீர்கள். வியாபாரத்தை பெரிய அளவில் விரிவுபடுத்த முயற்சிப்பீர். பாக்கி வசூலாகும்.
சிம்மம்: திட்டமிட்ட வேலையை திறம்பட முடிப்பீர்கள். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் தென்படும்.
கன்னி: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுப்பீர். அக்கம் பக்கத்தினரை பகைத்துக் கொள்ளாதீர். அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் இணக்கமாக செயல்படவும். வியாபாரம் லாபம் தரும்.
துலாம்: குடும்பத்தில் நிலவிய குழப்பங்கள் விலகும். பணவரவு திருப்திகரமாக அமையும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். அலுவலகத்தில் செல்வாக்கு உயரும். மேலதிகாரிகள் ஆதரவு தருவர்.
விருச்சிகம்: பிள்ளைகளின் படிப்பு தொடர்பாக செலவுவரக் கூடும். குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போகவும். அலுவலகத்தில் தானுண்டு தன் வேலையுண்டு என்று இருக்கவும். வியாபாரத்தில் பாக்கிகளை வசூலிப்பீர்கள்.
தனுசு: தள்ளிப் போய்க்கொண்டிருந்த திருமணம் கைகூடும். வழக்குகளை பேசித் தீர்ப்பீர். பணவரவு திருப்தி தரும். வியாபாரத்தை விரிவுபடுத்த முற்படுவீர். அலுவலகத்தில் தொல்லை தந்த அதிகாரி பணிவார்.
மகரம்: இழுபறியாக இருந்த பணிகள் நிறைவடையும். தந்தையாருடன் இருந்து வந்த பனிப்போர் விலகும். வியாபாரத்தில் பழைய சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் ஏற்றம் உண்டு.
கும்பம்: விவாதங்கள் விலகும். ஆடை, ஆபரணம் சேரும். முகமலர்ச்சியுடன் காணப்படுவீர். சகோதரரின் ஆதரவு உண்டு. வியாபாரம் சூடு பிடித்து நல்ல லாபம் பார்க்கலாம். அலுவலகத்தில் மேலதிகாரிகள் மதிப்பர்.
மீனம்: தள்ளிப் போய் கொண்டிருந்த சுபநிகழ்ச்சிக்கு நாள் குறிப்பீர். பணவரவு திருப்தி தரும். முன்கோபத்தை தவிர்ப்பீர். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துக் கொள்வீர். உத்தியோகம் சிறக்கும்.
| ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. | 
Sign up to receive our newsletter in your inbox every day!
								
WRITE A COMMENT