Published : 26 Aug 2025 06:31 AM
Last Updated : 26 Aug 2025 06:31 AM
மேஷம்: நேர்கொண்ட பார்வையுடன் முடிவெடுப்பீர். பிரபலங்கள் உதவுவர். அலுவலகரீதியான பயணங்கள் சிறப்பாக அமையும். வியாபாரத்தில் பணியாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவர். நல்ல லாபம் உண்டு.
ரிஷபம்: உங்களை சுற்றியிருப்பவர்களில் நல்லவர்களை கண்டறிவீர். நினைத்தது நிறைவேறும். பிள்ளைகள் குடும்ப சூழல் அறிந்து செயல்படுவர். வியாபாரம், உத்தியோகத்தில் எதிர்பாராத முன்னேற்றம் காண்பீர்கள்.
மிதுனம்: தேவைகள் பூர்த்தியாகும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர். வியாபாரத்தில் அலைச்சல், டென்ஷன் விலகும். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்க்கவும்.
கடகம்: புது வீடு, மனை, வாகனம் வாங்குவது குறித்து யோசிப்பீர்கள். வெளியூர் பயணங்களால் ஆதாயமுண்டு. வியாபாரத்தில் போட்டிகள் விலகும். அலுவலகத்தில் பணிச்சுமை குறையும். மேலதிகாரிகள் பாராட்டுவர்.
சிம்மம்: நீங்கள் முன்பு செய்த உதவிகளுக்கு இப்போது பாராட்டப்படுவீர். உறவினர்கள் மத்தியில் மதிப்புயரும். வியாபாரத்தில் புது சரக்குகளை கொள்முதல் செய்வீர். அலுவலகரீதியாக முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள்.
கன்னி: முக்கிய முடிவுகளை கவனமாக எடுக்கவும். எதிலும் அவசரம் வேண்டாம். வீட்டு பெரியவர்களின் பேச்சைகேட்டு செயல்படவும். வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிப்பீர். உத்தியோகம் சிறக்கும்.
துலாம்: தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். அலுவலகத்தில் திட்டமிட்ட பணிகளை சிரமப்பட்டு முடிப்பீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும்.
விருச்சிகம்: இங்கிதமான பேச்சால் எல்லோரையும் கவருவீர். தோற்றப் பொலிவு கூடும். பிள்ளைகள் நம்பிக்கை தருவார்கள். அலுவலகரீதியான பயணங்கள் சிறப்பாக அமையும். தொழிலில் போட்டிகள் குறையும்.
தனுசு: தள்ளிப் போய் கொண்டிருந்த சுபகாரியங்கள் கை கூடி வரும். பணவரவால் வீடு, வாகனத்தை மாற்றுவீர். கூட்டுத்தொழிலில் பங்குதாரர்கள் உதவிகரமாக நடந்து கொள்வர். அலுவலகத்தில் அமைதி காப்பது நல்லது.
மகரம்: குடும்பத்தாரின் உணர்வுகளைப் புரிந்து கொள்வீர். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். வழக்கில் இருந்து வந்த தேக்கநிலை மாறும். வியாபாரத்தில் முக்கியபிரமுகர்களின் அறிமுகம் கிட்டும். உத்தியோகம் சிறக்கும்.
கும்பம்: பிள்ளைகள் படிப்பு தொடர்பாக அலைச்சல் இருக்கும். குடும்பத்தாரை அனுசரித்து செல்வது நல்லது. வியாபாரத்தில் நிதானம் தேவை. அலுவலகத்தில் பணிச் சுமை கூடும். உழைப்புக்கேற்ற அங்கீகாரம் உண்டு.
மீனம்: வாழ்க்கையின் நெளிவு, சுளிவுகளைக் கற்றுக் கொள்வீர். மனைவிவழி உறவினர்களால் செலவு வரும். நண்பர் உதவியுடன் புது வேலை கிட்டும். வியாபாரம் லாபம் தரும். அலுவலகத்தில் விவாதம் வேண்டாம்.
| ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT