Published : 25 Aug 2025 06:26 AM
Last Updated : 25 Aug 2025 06:26 AM
மேஷம்: குடும்பத்தில் மகிழ்ச்சி, அமைதி திரும்பும். வெளிநாட்டு பயணத்துக்கு விசா கிடைக்கும். புதிய நபர்களால் ஆதாயம், அனுகூலம் உண்டாகும். வியாபார வளர்ச்சிக்கு புதிய உத்திகளை கையாள்வீர்கள்.
ரிஷபம்: வீட்டில் கல்யாண முயற்சிகள் பலிதமாகும். பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். வெளி வட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வீட்டை விரிவுபடுத்தி கட்டுவீர்கள். தொழில், வியாபாரத்தில் லாபம் உண்டு.
மிதுனம்: சொன்ன சொல்லைக் காப்பாற்ற துடிப்புடன் செயல்படுவீர்கள். பெற்றோர் உடல்நிலை சீராகும். உறவினர்கள், நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். பிள்ளைகளால் மரியாதை, அந்தஸ்து உயரும்.
கடகம்: வெளியூர் பயணத்தால் சற்று அலைச்சல், அசதி இருக்கும். குடும்பத்தில் அமைதி திரும்பும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். அனைவரையும் அனுசரித்து, அரவணைத்துச் செல்வீர்கள்.
சிம்மம்: இழுபறியாக உள்ள பிரச்சினையில் இருந்து விடுபட, மாற்றுவழி கண்டறிவீர்கள். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். உற்சாகம் கூடும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு உண்டு.
கன்னி: குடும்பத்தில் விட்டுக்கொடுத்துச் செல்லுங்கள். திடீர் பயணத்தால் அனுகூலம் உண்டு. பிள்ளைகள் உடல்நலத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் லாபம் உண்டாகும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும்.
துலாம்: வெளிப்படையாக, சாதுர்யமாக பேசி, சில காரியங்களை முடிப்பீர்கள். கணவன் - மனைவிக்குள் மனஸ்தாபம் நீங்கி, அன்யோன்யம் பிறக்கும். விருந்தினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி பொங்கும்.
விருச்சிகம்: மனதுக்கு இதமான செய்தி வரும். உடல் சோர்வு, வயிற்றுவலி குணமாகும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். வேலையாட்கள் ஆதரவாக இருப்பார்கள். நாடி வந்தவர்களுக்கு உதவுவீர்கள்.
தனுசு: வெளி வட்டாரத்தில் மதிப்பு, மரியாதை உயரும். குடும்பத்தில் சுபகாரியங்கள் ஏற்பாடாகும். நண்பர்கள் தக்க சமயத்தில் உதவுவார்கள். தொழில், வியாபாரம் சூடுபிடிக்கும். அரசு வகையில் ஆதாயம் உண்டு.
மகரம்: வீட்டு உபயோகப் பொருட்கள், மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். மனைவி வழியில் பண உதவி கிடைக்கும். வாகனப் பழுது நீங்கும். வியாபார ரீதியாக முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள்.
கும்பம்: குடும்பத்தினரிடம் வீண் வாக்குவாதம் வேண்டாம். பணம், நகை, முக்கிய கோப்புகளை கவனமாக கையாளுங்கள். முன்கோபத்துக்கு இடம் தராதீர்கள். வியாபாரத்தில் போட்டி இருந்தாலும் சமாளிப்பீர்கள்.
மீனம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். வீண், ஆடம்பர செலவுகளை குறைத்து, சேமிப்பீர்கள். வியாபாரத்தை விரிவுபடுத்த முக்கிய நபர்களை சந்திப்பீர்கள். அலுவலக ரீதியான பிரச்சினைகள் ஓயும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT