Published : 22 Aug 2025 06:30 AM
Last Updated : 22 Aug 2025 06:30 AM
மேஷம்: குடும்பத்தில் இருந்த காரசாரமான விவாதம் மறையும். பிள்ளைகளால் பெருமையடைவீர். நல்லவர் நட்பு கிட்டும். அலுவலகத்தில் உயரதிகாரி நேசக்கரம் நீட்டுவார். வியாபாரத்தை விரிவுபடுத்த முயற்சிப்பீர்.
ரிஷபம்: வெளிவட்டாரத்தில் மகிழ்ச்சி தங்கும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். தொழிலில் போட்டி குறையும். உத்தியோகம் சிறக்கும்.
மிதுனம்: புதியவர்கள் நண்பர்களாவர். கொடுக்கல் - வாங்கலில் சுமுகமான நிலை இருக்கும். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்களால் சரக்குகள் விற்பனையாகும்.
கடகம்: பழைய பிரச்சினைகள் தொடர்பான குழப்பம் தொடரும். பிள்ளைகளின் உடல்நலத்தில் அக்கறை காட்டவும். வியாபாரத்தில் அவசர முடிவு வேண்டாம். உத்தியோகரீதியாக வெளியூர் பயணம் மேற்கொள்வீர்.
சிம்மம்: வெளிவட்டாரத்தில் புதியவர்களின் நட்பு கிடைக்கும். தள்ளிப் போன வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். அரசு காரியங்கள் விரைந்து முடியும். புதியவர்கள் அறிமுகமாவர். வியாபாரம், உத்தியோகம் சிறக்கும்.
கன்னி: பழைய பிரச்சினைக்கு புது தீர்வு கிடைக்கும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர். ஓரளவு நல்ல லாபம் பார்க்கலாம். அலுவலகரீதியாக முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்.
துலாம்: விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்து கொள்வர். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவர். வியாபாரம், உத்தியோகத்தில் முன்னேற்றம் காண்பீர்.
விருச்சிகம்: மின்சார சாதனங்களை மாற்றி அமைக்கும் முயற்சிகளில் இறங்குவீர்கள். பழைய கடனை நினைத்து வருந்த வேண்டாம். புதுவழி பிறக்கும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் ஆதரவு உண்டு. உத்தியோகம் சிறக்கும்.
தனுசு: மனப் போராட்டங்கள், குழப்பங்கள் விலகும். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். பழைய நண்பர்கள் தேடி வருவர். வாகனப் பழுது சீராகும். வியாபாரத்தில் பாக்கி வசூலாகும். அலுவலகத்தில் நற்பெயர் கிட்டும்.
மகரம்: வீண் அலைச்சல், விரயச் செலவு வந்து போகும். குடும்பத்தினரிடம் விட்டுக் கொடுத்து போகவும். விவாதம் தவிர்ப்பீர். வியாபாரத்தில் அவசரம் காட்ட வேண்டாம். அலுவலகத்தில் பணிச்சுமை குறையும்.
கும்பம்: தொட்டது துலங்கும். தடைகள் நீங்கும். இழுபறியாக இருந்த வேலைகள் முடிவடையும். அரசு தொடர்பான காரியங்கள் உடனடியாக நிறைவேறும். வியாபாரம், உத்தியோகத்தில் எதிர்பார்த்த ஏற்றமுண்டு.
மீனம்: பழைய கசப்பான சம்பவங்களைப் பற்றி பேச வேண்டாம். தாயாரின் உடல்நலத்தை கவனிக்கவும். அலுவலகத்தில் பிறரைப் பற்றி தலைமையிடத்தில் குறை கூறாதீர். வியாபாரத்தில் எதிலும் கவனம் தேவை.
| ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT