Published : 19 Aug 2025 06:37 AM
Last Updated : 19 Aug 2025 06:37 AM
மேஷம்: எதிர்பார்த்த உதவி தக்க சமயத்தில் கிடைக்கும். தெளிவான முடிவுவால் தொல்லை நீங்கும். வியாபாரம் சூடு பிடித்து லாபம் தரும். அலுவலகத்தில் இழுபறியாக இருந்த வேலைகள் அனைத்தையும் முடிப்பீர்கள்.
ரிஷபம்: குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு கூடும். செலவைக் குறைத்து சேமிப்பீர்கள். பிள்ளைகளால் பெருமையடைவீர். வியாபாரத்தில் வேற்றுமொழி வாடிக்கையாளர்கள் வருவர். உத்தியோகம் சிறக்கும்.
மிதுனம்: பிள்ளைகளின் பிடிவாதம் அதிகரிக்கும். சற்று விட்டுப் பிடிப்பது நல்லது. வாகனம் செலவு வைக்கும். அலுவலகத்தில் யாரையும் குறை சொல்ல வேண்டாம். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிக்க வேண்டிவரும்.
கடகம்: அரசுக் காரியங்களில் இருந்து வந்த தடைகள் விலகும். வெளிவட்டாரத் தொடர்பு அதிகரிக்கும். பயணங்கள் மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். அலுவலகத்தில் நிம்மதியுண்டு.
சிம்மம்: ஒதுங்கியிருந்த உறவினர், நண்பர்கள் ஓடிவந்து பேசுவர். தம்பதிக்குள் நெருக்கம் கூடும். வாகனத்தை மாற்றுவீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் தென்படும்.
கன்னி: பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகு முறையால் தீர்வு காண்பீர். ஆன்மிகத்தில் நாட்டம் கூடும். உத்தியோகத்தில் அதிகாரிகள் முக்கிய அறிவுரை தருவார்கள். வியாபாரத்தை விரிவுபடுத்த முயற்சிப்பீர்.
துலாம்: பணவரவு உண்டு. கைமாற்றாக வாங்கியிருந்த தொகையை தந்து முடிப்பீர்கள். தாய்வழி உறவினர்கள் மத்தியில் மதிப்பு உயரும். வியாபாரம் விறுவிறுப்பாக அமையும். பாக்கி வசூலாகும். உத்தியோகம் சிறக்கும்.
விருச்சிகம்: வீண் அலைச்சல், காரியத் தடைகள் வரக் கூடும். வெளிவட்டாரத்தில் நிதானம் தேவை. எதிலும் அவசரம் வேண்டாம். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர். அலுவலகத்தில் அமைதி காப்பது நல்லது.
தனுசு: திட்டமிட்ட வேலையை முழு மூச்சுடன் முடித்து காட்டுவீர். குடும்பத்தில் பனிப்போர் இருக்கும். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து நடக்கவும். வியாபாரத்தில் நிம்மதியுண்டு. அலுவலகத்தில் பணிச்சுமை இருக்கும்.
மகரம்: வெளிவட்டாரத்தில் கவுரவப் பதவிகள் தேடி வரும். மனைவிவழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். புது வேலை அமையும். அரசால் அனுகூலம் உண்டாகும். வியாபாரம், உத்தியோகத்தில் முன்னேற்றம் காண்பீர்.
கும்பம்: சோர்வு நீங்கி சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் நட்புறவாடுவர். வியாபாரத்தில் புது சரக்குகளை கொள்முதல் செய்வீர். அலுவலகத்தில் உயர்ந்த பதவி உங்களைத் தேடி வரும்.
மீனம்: முகத்தில் தெளிவு பிறக்கும். சோம்பல் விலகும். விஐபிகளின் உதவியுடன் சில காரியங்களை விரைந்து முடிப்பீர். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் அமைதி காப்பீர்.
| ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT