Published : 13 Aug 2025 06:20 AM
Last Updated : 13 Aug 2025 06:20 AM
மேஷம்: சமூகத்தில் பிரபலமானவரைச் சந்திப்பீர்கள். கணவன் - மனைவிக்குள் நிலவிய கருத்துவேறுபாடுகள் நீங்கும். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். உத்தியோகத்தில் திருப்திகரமான சூழ்நிலை உருவாகும்.
ரிஷபம்: அதிகாரத்தில் இருப்பவர்களின் ஆதரவு கிட்டும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழல் காணப்படும். எதிர்பாராத வகையில் பணவரவு உண்டு. வாகன பராமரிப்பு செலவு குறையும். வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள்.
மிதுனம்: நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த வேலைகளை இன்று முடிப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். கூட்டுத்தொழிலில் பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள். அலுவலகத்தில் நிம்மதியுண்டு.
கடகம்: குடும்பத்தில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கும். விலகி இருந்த சொந்தபந்தங்கள் விரும்பி வருவார்கள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும். கலைப்பொருட்கள் வாங்குவீர்கள்.
சிம்மம்: குடும்பத்தினரிடம் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. வாயுக்கோளாறால் சில அசவுகரியங்கள் ஏற்படக் கூடும். வாகனம் அடிக்கடி செலவு வைக்கும். மேலதிகாரிகளின் கெடுபிடிகள் அதிகரிக்கும்.
கன்னி: முக்கிய காரியங்களை நீங்களே முன்னின்று மேற்கொள்வீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். பால்ய நண்பரை எதிர்பாராது சந்திப்பீர்கள். வெளியூர் பயணம் உண்டு.
துலாம்: சாதுர்யமாகப் பேசி காரியங்களை சாதிப்பீர்கள். பிள்ளைகளின் பெருமைகளை மற்றவர்களிடம் சொல்லி மகிழ்வீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள்.
விருச்சிகம்: உங்களை தவறாக நினைத்துக் கொண்டிருந்த உறவினர்கள், நண்பர்களின் மனம் மாறும். வீட்டில் மகிழ்ச்சி பொங்கும். உத்தியோகத்தில் மேலதிகாரியின் பாராட்டு கிடைக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும்.
தனுசு: துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் உதவியை நாடுவார்கள். வியாபாரத்தில் போட்டிகளை சமாளித்து லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள்.
மகரம்: நீண்ட நாட்களாக எதிர்பார்த்த தொகை வந்துசேரும். மனைவியின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். பிள்ளைகளால் நிம்மதியுண்டு. விருந்தினர், நண்பர்கள் வருகையால் வீடு கலகலப்பாகும்.
கும்பம்: எதிர்காலத்துக்கான திட்டங்கள் தீட்டுவீர்கள். பிள்ளைகளின் உடல்நலம் சீராகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல தகவல் வந்து சேரும். ஆன்மிகத்தில் நாட்டம் ஏற்படும்.
மீனம்: குடும்பத்தினருடன் வீண் வாக்குவாதம் வந்துபோகும். முன்கோபத்தை தவிர்ப்பது நல்லது. வீடு, வாகனப்பராமரிப்பு செலவு திட்டமிட்டதைவிட அதிகரிக்கும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிக்கப் போராடுவீர்கள்.
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT