Published : 12 Aug 2025 06:20 AM
Last Updated : 12 Aug 2025 06:20 AM

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: மன தைரியம் கூடும். கேட்ட இடத்தில் உதவி கிட்டும். சாதுர்யமாக பேசி காரியங்களை சாதித்துக் காட்டுவீர். விலையுயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரம், உத்தியோகத்தில் முன்னேற்றம் காண்பீர்.

ரிஷபம்: அடிப்படை வசதி பெருகும். பூர்வீக சொத்துப் பிரச்சினை முடிவுக்கு வரும். சுபநிகழச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். வியாபாரம் சூடு பிடித்து லாபம் தரும். உத்தியோகரீதியாக பயணம் மேற்கொள்வீர்கள்.

மிதுனம்: சவாலான விஷயங்களை சர்வ சாதாரணமாக முடித்துக் காட்டுவீர். உறவினர் மத்தியில் மதிப்பு கூடும். விவாதங்களில் வெற்றியுண்டு. பிரபலங்களால் வியாபா ரத்தில் பயனடைவீர். அலுவலகத்தில் அமைதி காப்பீர்.

கடகம்: எதிரிகளின் கொட்டம் அடங்கும். தம்பதிக்குள் மகிழ்ச்சியுண்டு. விருந்தினர், நண்பர்கள் வருகையால் வீடு களைகட்டும். அலுவலகரீதியான பயணம் திருப்தி தரும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் ஆதரவு உண்டு.

சிம்மம்: பழைய சொத்துப் பிரச்சினைகளை இப்போது கையிலெடுக்காதீர். குடும்பத்தில் குழப்பங்கள் வரலாம். நண்பர்கள் உதாசீனப்படுத்துவர். வியாபாரம் சூடு பிடிக்கும். அலுவலகத்தில் தேடிய ஆவணம் தென்படும்.

கன்னி: கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர். சுபநிகழ்ச்சிகளில் பங்கேற்பீர்கள். மூத்த சகோதரர்கள் உறுதுணையாக இருப்பர். வாகனப் பழுதை சீர் செய்வீர். வியாபாரம் சிறக்கும். அலுவலகத்தில் மதிப்பு உயரும்.

துலாம்: பழைய நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். பிள்ளைகள் பொறுப்புடன் செயல்படுவர். வியாபார ரீதியாக முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைக்கும். பாக்கி வசூலாகும். அலுவலகத்தில் விவாதம் தவிர்ப்பீர்.

விருச்சிகம்: உங்களை சுற்றியிருப்பவர்களில் நல்லவர் யார் என்பதை உணர்வீர்கள். உறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி கிட்டும். வியாபாரத்தில் நல்ல லாபம் உண்டு. அலுவலகத்தில் எதிலும் உங்கள் கை ஓங்கும்.

தனுசு: வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். குழந்தைகளின் விருப்பங்களை நிறைவேற்றுவீர். தாய் வழி உறவுகளால் ஆதாயமுண்டு. அலுவலகத்தில் உயர் அதிகாரிகள் ஆதரிப்பர். வியாபாரப் போட்டி விலகும்.

மகரம்: நட்பு வட்டம் விரியும். பழைய பிரச்சினைகளை தீர்ப்பீர்கள். தாயாருடன் விவாதம் வந்து போகும். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர். மனக் குழப்பம் நீங்கும். வியாபாரம், உத்தியோகம் சிறக்கும்.

கும்பம்: வருங்காலத்துக்கான திட்டங்களை தீட்டுவீர். வங்கிக் கடனுதவி கிட்டும். உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர். அலுவலகத்தில் பணிச்சுமை குறையும். வியாபார நுணுக்கங்களைக் கற்றறிவீர்கள்.

மீனம்: பிள்ளைகள் படிப்பு தொடர்பாக அலைச்சல் இருக்கும். தாயாரின் மருத்துவச் செலவு குறையும். வியாபாரத்தில் பாக்கி வசூலாகும். அலுவலகரீதியாக முக்கிய பிரமுகர்களை சந்திக்கும் வாய்ப்பு கிட்டும்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x