Published : 08 Aug 2025 06:17 AM
Last Updated : 08 Aug 2025 06:17 AM
மேஷம்: முகப்பொலிவுடன் காணப்படுவீர். குடும்பத் தில் சந்தோஷம் நிலைக்கும். நெருங்கியவர்களுக்காக மற்றவர் உதவியை நாடுவீர். வியாபாரத்தில் புது சரக்கு வந்து இறங்கும். அலுவலகத்தில் அமைதி காக்கவும்.
ரிஷபம்: பணவரவு உண்டு. குறை கூறியவர்கள் வலிய வந்து பேசுவர்.வீட்டில் நல்லது நடக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் கையெழுத்தாகும். பங்குதாரர் நேசக்கரம் நீட்டுவார். உத்தியோகத்தில் ஏற்றம் காண்பீர்.
மிதுனம்: குடும்பத்தில் குழப்பங்கள் வரும். பழைய சொத்துப் பிரச்சினைகளை இப்போது பேச வேண்டாம். நண்பர்கள் உங்களை உதாசீனப்படுத்துவர். வியாபாரம் லாபம் தரும். அலுவலகத்தில் விவாதம் தவிர்க்கவும்.
கடகம்: ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். பிள்ளை களின் விருப்பங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். புதிய நண்பர்கள் அறிமுகமாவர். வியாபாரம் சிறக்கும். அலுவலகத்தில் சக ஊழியர்கள் மத்தியில் மதிப்புயரும்.
சிம்மம்: பூர்வீக சொத்து தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு கிட்டும். பழைய நண்பர்கள் தேடி வருவார்கள். அலுவலகரீதியான பயணம் மேற்கொள்வீர். கூட்டுத் தொழிலில் புதிய வாடிக்கையாளர்கள் அறிமுகமாவர்.
கன்னி: முக்கிய பிரமுகர்கள் அறிமுகமாவர். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிட்டும். வியாபாரத்தை பெரிய அளவில் விரிவுபடுத்த வங்கிக் கடன் கிடைக்கும். அலுவலகத்தில் உங்களின் கோரிக்கைகள் ஏற்கப்படும்.
துலாம்: மனதிலிருந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். தாயாரின் மருத்துவ செலவு குறையும். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர். உத்தியோகம் சிறக்கும்.
விருச்சிகம்: குடும்பத்தினரை கலந்தாலோசித்து பழைய பிரச்சினைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். தொழில் ரீதியாக சில விஐபிகளை சந்திப்பீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். புதிய பதவி கிடைக்கும்.
தனுசு: குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கூடும். விலை உயர்ந்த பொருள் வாங்குவீர். வீட்டில் கூடுதலாக ஒரு தளம் கட்டுவீர். வியாபாரத்தில் போட்டி குறையும். அலுவலகத்தில் பிறர் விஷயத்தில் தலையிடாதீர்கள்.
மகரம்: பிள்ளைகளின் உடல்நலனில் கவனம் செலுத்துவது நல்லது. அலுவலகத்தில் சக ஊழியர்கள் உங்களுக்கு எதிராக செயல்படுவர். வியாபாரத்தை பெரிய அளவில் விரிவுபடுத்தும் முயற்சியில் ஈடுபடுவீர்கள்.
கும்பம்: தம்பதிக்குள் நெருக்கம் கூடும். குழப்பம் நீங்கி தெளிவான முடிவுகளை எடுப்பீர். வெளிவட்டாரத்தில் மதிப்பு, மரியாதை கூடும். பணவரவால் மனநிம்மதி உண்டு. வியாபாரம், உத்தியோகத்தில் ஏற்றம் காண்பீர்.
மீனம்: பணவரவு உண்டு. எதிர்பாராத பயணத்தால் ஆதாயம் இருக்கும். விஐபிகளின் நட்பு கிட்டும். அரசு காரியம் விரைந்து முடியும். பங்குதாரர்களுடன் இருந்த மோதல் விலகும். அலுவலகத்தில் அமைதி காக்கவும்.
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT