Published : 07 Aug 2025 06:14 AM
Last Updated : 07 Aug 2025 06:14 AM
மேஷம்: மனதுக்கு இதமான செய்தி வரும். குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். வராது என்றிருந்த பணம் வரும். தாய்வழி உறவினரால் ஆதாயமுண்டு. வியாபாரத்தில் ஏற்றம் காண்பீர். அலுவலகத்தில் பணிச்சுமை குறையும்.
ரிஷபம்: மன இறுக்கம் நீங்கி முகப்பொலிவுடன் காணப்படுவீர். குடும்பத்தில் நிலவி வந்த குழப்பங்கள் விலகும். குலதெய்வ பிரார்த்தனையை நிறைவேற்றுவீர். வியாபாரம் சூடு பிடிக்கும். உத்தியோகம் சிறக்கும்.
மிதுனம்: குடும்பத்தில் கவனமாக பேசவும். உங்கள் பேச்சுக்கு மதிப்பிருக்காது. பிள்ளைகளால் டென்ஷன் ஏற்படும். உடல்நலம் பாதிக்கும். வியாபாரம் ஓரளவு லாபம் தரும். அலுவலகத்தில் மேலதிகாரி பாராட்டுவார்.
கடகம்: உடன்பிறந்தவர்கள் உதவிகரமாக இருப்பர். திட்டமிட்டபடி வேலைகளை முடிப்பீர். அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஆதரவுண்டு. வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஆலோசனைகளை கேட்டு நடந்து கொள்ளவும்.
சிம்மம்: குடும்பத்தாருடன் கலந்து பேசி முக்கிய முடிவு எடுப்பீர். கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். சகோதரர்களால் பயனடைவீர்கள். வியாபாரம் லாபம் தரும். அலுவலகரீதியாக பயணங்கள் மேற்கொள்வீர்.
கன்னி: தொலை நோக்கு சிந்தனையுடன் செயல்பட்டு சில பிரச்சினைகளை முடிப்பீர். தம்பதிக்குள் இடையே இருந்து வந்த சந்தேகம் விலகும். பிள்ளைகள் அன்பாக நடந்து கொள்வர். வியாபாரம், உத்தியோகம் சிறக்கும்.
துலாம்: எதிர்பார்த்த பண உதவி கிட்டும். விஐபிகளின் அறிமுகம் கிடைக்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். வியாபாரத்தில் பணியாட்களால் நிம்மதி உண்டு. அலுவலகத்தில் மதிப்பு, மரியாதை உயரும்.
விருச்சிகம்: குழப்பம் நீங்கி குடும்பத்தில் அமைதி நிலவும். எதிர்பார்த்த தொகை வரும். வியாபாரத்தில் கடையை மாற்றியமைப்பீர். அலுவலகத்தில் உங்கள் ஆலோசனையை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள்.
தனுசு: பணவரவு உண்டு. குடும்ப உறுப்பினர்களிடம் விவாதம் வேண்டாம். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். அலுவலக பணிச்சுமையால் உடல் அசதி, மனச் சோர்வு வரக்கூடும். மேலதிகாரிகள் பாராட்டுவர்.
மகரம்: உங்களை சுற்றியிருப்பவர்கள் உங்களால் பயனடைவர். எதையும் திட்டமிட்டு செயல்படுத்துவீர். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் கிடைப்பர். அலுவலகத்தில் யாரைப் பற்றியும் குறை கூறாதீர்கள்.
கும்பம்: குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வர். பணவரவு உண்டு. அலுவலகத்தில் உயரதிகாரி உங்களிடம் கனிவாக பேசுவார். வியாபாரம் திருப்திகரமாக இருக்கும்.
மீனம்: எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் கிட்டும். பிள்ளைகளால் உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிப்பு கூடும். நவீன சாதனங்கள் வாங்குவீர். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் வருவர். உத்தியோகம் சிறக்கும்.
| ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT