Published : 06 Aug 2025 06:33 AM
Last Updated : 06 Aug 2025 06:33 AM
மேஷம்: அடுக்கடுக்காக இருந்து வந்த செலவுகள் இனி குறையும். சவாலான காரியங்களையும் எடுத்து முடிப்பீர். பணவரவு உண்டு. அலுவலகரீதியான பயணம் செல்வீர். வியாபாரத்தில் பிரபலங்களின் உதவியை நாடுவீர்கள்.
ரிஷபம்: குடும்பத்தாருடன் விவாதங்கள் வர வாய்ப்பு உண்டு. பிள்ளைகளின் உடல் நலத்தில் கவனம் தேவை. வியாபாரம் ஓரளவு லாபம் தரும். அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் இணக்கமான போக்கை கடைபிடிப்பீர்.
மிதுனம்: எதிரிகளை வீழ்த்தும் வல்லமை உண்டாகும். கறாராக பேசி காரியம் சாதிப்பீர். சேமிக்கும் அளவுக்கு வருவாய் கூடும். பழுதான சாதனங்களை மாற்றுவீர். வியாபாரம், உத்தியோகத்தில் முன்னேற்றம் காண்பீர்.
கடகம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். எதிர்பார்த்த விலைக்கே பழைய சொத்தை விற்பீர். முக்கிய பிரமுகர்கள், வெற்றி பெற்றவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரம், உத்தியோகம் சிறக்கும்.
சிம்மம்: முகத்தில் தெளிவு பிறக்கும். சில வேலைகளை முடித்துவிட்டோம் என மன நிம்மதியுடன் இருப்பீர்கள். பிள்ளைகள் கேட்டதை வாங்கிக் கொடுப்பீர். வியாபாரம் லாபம் தரும். அலுவலகத்தில் உங்கள் கை ஓங்கும்.
கன்னி: வெளிவட்டாரத்தில் மதிப்பு கூடும். பழைய நினைவுகளில் மூழ்குவீர். குழப்பம் நீங்கி குடும்பத்தில் அமைதி நிலவும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் மேலதிகாரிகள் நேசக்கரம் நீட்டுவர்.
துலாம்: உறவினர் மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும். தந்தைவழி சொத்துகள் கைக்கு வரும். மூத்த சகோதர சகோதரிகள் பணஉதவி செய்வர். வாகனப்பழுது நீங்கும். வியாபாரத்தில் லாபமுண்டு. உத்தியோகம் சிறக்கும்.
விருச்சிகம்: அரசு காரியங்களில் வெற்றியுண்டு. பணவரவு திருப்திகரமாக இருக்கும். மகிழ்ச்சியுடன் காணப்படுவீர். குடும்பத்தில் நிம்மதி கிட்டும். உத்தியோகத்தில் மேலதிகாரி பாராட்டுவார். வியாபாரத்தில் ஏற்றமுண்டு.
தனுசு: கையிருப்பு கரையக்கூடும். பிள்ளைகளின் உடல்நிலை லேசாக பாதிக்கும். ஆன்மிகத்தில் நாட்டம் கூடும். அலுவலகத்தில்யாரை பற்றியும் குறை கூறாதீர். வியாபாரத்தில் பங்குதாரர்களின் ஆலோசனையை கேட்கவும்.
மகரம்: பிள்ளைகளின் வருங்காலத்துக்காக சேமிக்கத் தொடங்குவீர். வழக்கு சாதகமாக முடியும். புதியவர்கள் அறிமுகமாவர். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர். வர வேண்டிய பாக்கி வந்து சேரும். உத்தியோகம் சிறக்கும்.
கும்பம்: எதிர்பார்த்து கொண்டிருந்த பணம் கிடைக்கும். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து நடந்து கொள்ளவும். பழுதான பொருட்களை மாற்றுவீர். வியாபாரம் ஓரளவு லாபம் தரும். அலுவலகத்தில் பொறுப்புகள் கூடும்.
மீனம்: சிக்கனமாக செலவழித்து சேமிக்க தொடங்குவீர். தாய்வழி உறவினரால் ஆதாயமுண்டு. வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். பணியாட்களின் ஆதரவு கிட்டும். அலுவலகத்தில் விவாதம் தவிர்ப்பது நல்லது.
| ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT